சீனக் கலாச்சார கொண்டாட்டத்திற்கு அரசாங்க மானியம் ரிம3 இலட்சம், நஜிப் அறிவிப்பு

 

Najibgivesதிரங்கானு தியோங் ஹுவா அசெம்பிளி ஹால் 34 ஆவது மலேசியன் சீனக் கலாச்சார திருவிழாவை கொண்டாடுவதற்கு பிரதமர் நஜிப் ரிம3000,000 நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு சீனக் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிக்கு அரசாங்கத்தின் ஆரதவைக் காட்டுகிறது என்று நஜிப் கூறினார்.

இது முதலாவது ஒதுக்கீடு அல்ல; அது 2009 ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது என்று கோலதிரங்கானு, கம்போங் சீனாவில் கலாச்சார கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்த போது நஜிப் கூறினார்.

அந்நிகழ்ச்சியில் நஜிப்பின் உரையை போக்குவரத்து அமைச்சரும் மசீச தலைவருமான லியோ தியோங் லாய் வாசித்தார். அவருடன் மந்திரி புசாரை பிரதிநிதித்து மாநில வாணிபம் மற்றும் தொழில்துறை குழுவின் தலைவர் தெங்கு புத்ரா அவாங்கும் இருந்தார்..