எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வசமுள்ள இடங்களில் எல்லாம் போட்டியிட பாஸ் முடிவு செய்துள்ளது. வெற்றி, தோல்வி பற்றி அது கவலைப்படவில்லை.
சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கோட்டையாக திகழும் பெர்மாத்தாங் உள்பட பினாங்கிலும் தேசிய அளவில் மற்ற இடங்களிலும் பாஸ் அதன் வேட்பாளர்களைக் களமிறக்கும் என பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறியதாக உத்துசான் மலேசியா ஆன்லைன் தெரிவித்தது.
“நாங்கள் இப்போது எந்தக் கட்சிக்கும் கட்டுப்பட்டிருக்கவில்லை. எங்கு விரும்புகிறோமோ அங்கு போட்டியிடுவோம்.
“முன்பு (பக்கத்தான் ரக்யாட்டுடன்) உடன்பாடு இருந்தது.
“இப்போது அப்படி எதுவும் இல்லை”, என்றாரவர்.
பாஸ் கட்சியை நம்பி திரெங்கானு மக்கள், மாநில ஆட்சியை ஒப்படைத்தார்கள். என்னவாயிற்று? திரெங்கானு கடலில் உங்கள் சாதனைகளை தேடவேண்டியதாயிற்று. உங்கள் வெளிவேஷத்தை நம்பி கெடா மாநிலத்தையும் தந்தார்கள். என்னவாயிற்று? உங்கள் சாதனைகளை பூஜாங் பள்ளத்தாக்கில் தேடிக்கொண்டிருக்கிறோம். அடுத்தது கிளந்தான். அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ, அங்கே வெற்றி பெற போகிறது. அங்கே போய் ஏதாவது செய்ய முடியுமா என பாருங்கள். பினாங்கில் கை வைப்பது, எவெரெஸ்ட் மலை உச்சிக்கு உடம்பில் எவ்வித துணியுமில்லாமல் அம்மணமாக ஏறுவதற்கு சமம்.
வணக்கம். சரியாக சொன்னீர்கள் singam.
singam அவர்களே ! சத்திய வார்த்தை சொன்னீர்கள் !!