டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு இடம்கொடுக்க மாட்டார். ஆனால்.
இப்போது அவர் “Sayangi Malaysia, Hapuskan Kleptorasi” ((மலேசியாவை நேசிப்போம், திருட்டுத்தனத்தை ஒழிப்போம்) பேரணிக்கு ஆசி வழங்குகிறார்.
துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.
“அவர் பிரதமராக இருந்தபோது, உள்துறை அமைச்சையும் அவரே வைத்திருந்தார், பேரணி நடத்த அனுமதிக்க மாட்டார். இப்போது எதிரணிக்குச் சென்றதும் அவரே பேரணிக்கு ஏற்பாடு செய்கிறார்” .
காலமாற்றத்துக்கு ஏற்ப நிலைமாறும் மகாதிர் கொள்கையற்றவர் என ஜாஹிட் புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
ஐயா தேங்காய் தலையா! மகாதிமிர் ஆட்சியின் போது பேரணிகள் இல்லையா? 1987ல் வாயில் பூத்திங் வைத்திருந்தீரா? 17-10-1987 ல்,soak the chinese blood with our kris என்று பொறிக்கப்பட்ட பதாதகைகளோடு தலைநகர் TPCA அரங்கிலிருந்து பெரிய தொரு பேரணியோடு, நஜிப் ஊர்வலம் வந்தது தெரியுமா, அல்லது தெரியாதது போல நடிக்கிறீரா? இந்த எழுச்சியின் காரணமாக, மறுநாள், PRIVATE ADAM என்பவன் M 16 ஐ எடுத்துக்கொண்டு சோவ் கிட்(Chow Kit ) பகுதியில் ஒருவனை சுட்டுக் கொன்று, பலருக்கு காயமும் விளைவித்தானே, தெரியுமா? இத்தகைய பேரணிகளை நடத்தியவர் இந்த மகாதிமிர்தான். வர வர இந்த அரசியல்வாதிகள், பொய் சொல்வதில் தெனாலி ராமனையே மிஞ்சி விடுகிறார்கள்.
ஆரம்பத்தில் அன்வாருக்கு கொடி பிடித்து, பிறகு மகாதிரை ஆதரித்தபோது எந்த கொள்கையை கடை பிடித்தார் என்பதை விளக்கமாக சொல்ல முடியுமா இந்த ஜாஹிட்டினால் ?
ஒரு காக்கா மற்றொரு காக்காவை பார்த்து நீ கருப்பு என்று கூறுவதைபோல் உள்ளது.