பாதிரியார் ரேய்மண்ட் கோவின் கடத்தலில் தென் தாய்லாந்து கும்பலொன்றுக்குச் சம்பந்தம் உண்டு என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று தெரிவித்தார்.
“மூன்று, நான்கு பேரைக் கைது செய்து விசாரித்ததில் அன்றொரு நாள் நாங்கள் சுட்டுக்கொன்ற நபர்தான் அக்கும்பலின் தலைவன் என்று தெரிகிறது- அவன்தான் பாதிரியாரைக் கடத்தியவன்.
“அகும்பலுக்குத் தென் தாய்லாந்தில் உள்ள இன்னொரு கும்பலுடன் தொடர்புள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்தது”, என்று கூறிய காலிட் இவ்விவகாரத்தைப் புலனாய்வு செய்வதில் மலேசிய போலீசாரும் தாய்லாந்து போலீசாரும் ஒத்துழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
கடத்தல் கும்பலின் தலைவன் என்று போலீசார் நம்பும் அந்த 41-வயது ஆடவன் ஜூன் 17-இல், கெடா, அலோர் ஸ்டாரில் கம்போங் வெங் டாலாமில் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்போது அக்கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அந்த ஆடவனின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.