அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில் 1எம்டிபி விவகாரத்தைப் பெரிதுபடுத்தி விட்டனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அடங்கிய கூட்டமொன்றில் உரையாற்றியபோது இதைத் தெரிவித்தார்.
1எம்டிபி நிர்வாகத்தில் சில குறைபாடுகள் இருந்தது உண்மைதான் என்று கூறிய அவர் அவற்றைச் சரிசெய்யுமாறு தாமே பணித்ததாகவும் கூறினார்.
“1எம்டிபி-இல் பிரச்னைகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் சிலர் அதை ஊதிப் பெரிதுபடுத்தி விட்டனர். அவர்களின் நோக்கம் தேர்தல்களுக்கிடையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான்.
“ஆக, உண்மையில் 1எம்டிபி ஒரு பிரச்னை அல்ல. 1எம்டிபி இல்லையென்றால் அரசாங்கத்தைச் சட்டவிரோதமாகக் கவிழ்க்க வேறு ஏதாவதொன்றைக் கையிலெடுத்துக் கொண்டிருப்பார்கள்”, என நஜிப் அக்கூட்டத்தில் கூறினார். இன்வெஸ்ட் கேஎல் 2017 என்னும் அந்த முதலீட்டாளர் மாநாட்டில் 150க்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் 900 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
நஜிப் தனது ஆட்சி கவிழ போவது உறுதி என்பதால் இப்பொழுதே இப்படி பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி விட்டால், ஆட்சி கவிழ்ந்தவுடன் காரணம் கூறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் நஜிப்பின் அறிக்கை.
…….நீ ஒழுங்காய் செயல் பட்டிருந்தால் இவ்வளவு தொல்லைகள் வந்திருக்குமா? நீ பண்ணியது எல்லாம் திருட்டு கீழ்த்தரமான கேவலமான ஊழல்கள் அதை எல்லாம் மறைக்க நீ பண்ணிய அநியாயம் அதை எல்லாம் மிஞ்சி நீ செய்த மட்டரக மடத்தனங்களை அம்னோ நாதாரிகள் உன் சிப்பிகள் வேண்டுமானால் கண்டுக்காமல் இருக்கலாம் . சிந்திக்கும் மலேசியர்கள் எல்லோருக்கும் தெரியும் உன்னைப்பற்றி.