பிரதமர் பதவிலிருக்கும் ஒருவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பக்கத்தான் ஹரப்பன் என்ன வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்று இன்று பின்னேரத்தில் நடந்த ஒரு பொது கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் மகாதிரிடம் கேட்கப்பட்டது.
பிரதமரின் அதிகாரத்திற்கு வரம்புகள் விதிக்கும் உறுதிமொழி ஹரப்பான் வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும். அதில் சட்டம் இயற்றுதல், ஆட்சி செய்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய பிரிவுகளுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகள் நிலைநிறுத்தப்படும் என்று மகாதிர் கூறினார்.
“அநேகமாக, பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைக்கு அனுமதிக்கலாம். ஒரு தவணை (ஐந்து ருடம்) போதாது. பத்து வருடம் சரி என்று நான் நினைக்கிறேன்.
“அதற்கு சட்ட விதி நமக்குத் தேவைப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய மூன்றாவ்து அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.
மகாதிரின் 22 ஆண்டுகால ஆட்சியில், 1981 லிருந்து 2003 வரையில், அவர் மீது நீதித்துறையை கீழறுப்புச் செய்தது, தகா நட்பு முதலாளித்துவம், எதிர்ப்பாளர்களைச சிறையிலடைப்பது, ஊடகச் சுதந்திரத்தை முடக்கியது. பொது நிதியை வீண் செலவு செய்தது போன்ற பல கு/ற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஹரப்பான் மலாய்க்காரர்களை பாதுகாக்கும்
அமனா உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூட்டாக ஏற்பாடு செய்திருந்த “மலாய் அரசியலின் இலக்கு” என்ற கலந்துரையாடலில் பேசிய மகாதிர், ஹரப்பான் மலாய்க்காரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்று அங்கிருந்தவர்களிடம் உறுதியளித்தார்.
டிஎபி பெரும்பாலும் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களையும் தலைவர்களையும் கொண்டுள்ளது என்றாலும், அது ஹரப்பான் கூட்டணியில் உறுப்பினர் என்றாரவர்.
“நாங்கள் மலாய்க்காரர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாத அரசாங்கத்தை அமைப்போம். ஆம், ஹரப்பானில் டிஎபி இருக்கிறது, ஆனால் அதில் மலாய்க்காரர்கள் தலைமையிலான மூன்று கட்சிகள் இருக்கின்றன.
“(எந்த ஒரு விவகாரத்திலும்) ஒரு கட்சி ஒப்புக்கொள்ள மறுத்தால், அரசாங்கத்தை அமைக்க முடியாது.
“எடுத்துக்காட்டாக, பிரதமர் நியமனத்தில் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தாலும் (டிஎபி நாடாளுமன்றதலைவர்) லிம் கிட் சியாங்கை டிஎபி பிரதமராக நியமிக்க முடியாது”, என்று மகாதிர் விளக்கம் அளித்தார்.
இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த அந்தக் கலந்துரையாடலில், மலாய்க்காரர்கள் அவர்களைப் பிரதிநிதிப்பதற்கு ஹரப்பானை அனுமதிக்க வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தினார்.
“அம்னோவுக்கு மாற்றாக பெர்சத்து நிறுவப்பட்டது. அரசாங்கம் அமைப்பதற்கு அமனோவும் கூட தனித்து போட்டியிட முடியாது. அதற்கு மசீச, சரவாக் ஒன்றுபட்ட மக்கள் கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
“மலாய்க்காரர்களை பாதுகாப்பதற்கு நாம் அம்னோவை நம்ப முடியுமென்றால், அதையே பெர்சத்து (ஹரப்பானில் ஓர் அங்கமாக இருக்கையில்) செய்ய முடியும் என்பதை நாம் ஏன் நம்பக்கூடாது?”, என்று மகாதிர் வினாவினார்.
இவன் விடாப்பிடியாக 22 வருட
காலம் பிரதமமந்திரிப்பதவியை பிடித்து வைத்துக்கொண்டு,
அந்தக்காலக்கட்டத்தில் இவன் செய்த பெரும் அரசியல்
மாற்றத்தாலும், சட்டத்திருத்தங்களாலும், இந்திய சமூகம் எப்படி
அடக்கி ஒடுக்கப்பட்டது, அதன் பயனாக இந்த சமூகம் இன்று
பொருளாதார அடைவு நிலையில் கிட்டதட்ட 0% க்கு
தள்ளப்பட்டது என்றால் அது ஒரு போதும் மிகையாகாது !
இவைகளையெல்லாம் இன்றய மலேசிய இந்திய சமூகத்துக்கு
தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இப்படி
எழுதவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது . அன்று
இவன் இந்திய சமூதாயத்திற்கு செய்த துரோகங்கள் யாவும்
இன்றைய இளைய தலமுறைக்கு தெரியப்படுத்த வேண்டிய
கடமையும் நம்மை சார்ந்தது. இன்று ஏனோ,தானோ என்று வாழும்
இந்த தலைமுறைக்கு சொல்லாமல் போனோமானால்
எதிர்காலத்தில் துரோகிகளையும் தோளில் தூக்கி குத்தவைத்து
கூத்தாடிவிடும் நம் இளைய சமூதாயம். ஒரு வேலை நம்மில்
நல்ல உள்ளம் கொண்டோர் யாராவது, ஒரு சிறந்த முன்னாள்
பிரதம மந்திரியை இப்படி எழுதி சிறுமை படுத்துவது அழகல்ல
என்று கருதினால், 1987 ஆம் ஆண்டு UMNO மாநாட்டில் இவருக்கு
எதிராக போட்டியிட்ட தெங்கு ரசாலி அம்சா அவர்களை
அறிக்கைகளினாலும், அம்னோ சார்பு தொலைகாட்சியிலும்
எப்படியெல்லாம் சிறுமை படுத்தி எழுதியும்,பேசியும் இவன்
அவரை தோற்கடித்தான் , என்று இவரால்கற்றுக்கொடுக்கப்பட்ட
அரசியல் பாடமே இப்போது நான் எழுதியது ! துன் மூசா ஈத்தாம்
அவர்களால் எழுதப்பட்ட FRANKLY SPEAKING என்ற தலைப்பிலான
புத்தகத்தில் பிரதமர் நஜிப் ரசாக் அவர்கள் சகல அரசியல்
வித்தைகளையும் மகாதீரிடமே கற்றுத்தேறிய அவரின் மாணவன்
என்று குறிப்பிட்டு உள்ளார் . மகாதீரால் உந்தப்பட்ட எழுத்தாளர்
KHALID JEFFRI அவர்களால் எழுதப்பட்ட “ 50 DALIL MENGAPA ANWAR
IBRAHIM TIDAK BOLIH MENJADI PERDANA MENTERI “ என்ற புத்தகம்
நீதிமன்றத்தால் தடை செய்தும் கூட அந்த வருடம் நடந்த
அம்னோ பேராளர் மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களின்
பைகளில் திருட்டுத்தனமாக இந்த புத்தகம் வைக்கப்பட்டது !
ஒருவரை கட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்று முடிவெடுத்து
விட்டால், அதற்காக மகாதீர் எவ்வளவு கீழ்த்தரமான
காரியங்களிலும் இறங்க அவன் வெட்கப்பட மாட்டான் . எப்படி இவனால் எமது சமுதாயம் பொருளாதார ரீதியாக அகல பாதாளத்துக்கு தள்ளப்பட்டதோ, அது போல இவன் சாவதற்கு முன்பு சகல செல்வாக்கையும் இழந்து மரியாதை கெட்டவனாக சாகவேண்டும்.
மலாய்க்காரன்கள் காக்காத்திமிரின் முகத்தில் கரியை பூசிய பின்தான் இவனுக்கு புத்தி வந்தது என்று நினைத்தேன் நினைக்கிறேன் ஆனாலும் எதுவும் நிச்சயம் இல்லை. திருந்தி இருப்பானா என்றும் சந்தேகமே– பழைய குருடி கதவை திறடி என்று ஆனாலும் ஆகும்.என்றாலும் இதற்க்கு வேறு வழி? ஆங்கில கல்வியை ஒழித்து சாதித்தது என்ன? அறிவோடு நாம் என்ன கூறினாலும் அது எடு படாது. இந்த நாடு ஒற்றுமையுடன் சுதந்திரம் அடைந்தது என்று கூறினார்கள்-இன்றோ எல்லாமே அவன்கள் தான் சாதித்தது போல் எல்லாமே நடக்கிறது– அத்துடன் நம்மை வந்தேறிகள் என்று நச்சு படிப்பினை ஊட்டியது வேறு.
இந்திய இனத்தின் மேன்மையையும் முன்னேற்றதையும் தடுப்பதற்கென்றும் அளிப்பதற்கென்றும் இந்த பெரிய மனிதர் செய்த சதிகளும் !! சுழ்ச்சிகளும் ஏராளம் !டாக்டர்களும் ,வக்கீல்களும்,அரசாங்க உயர் பதவிகளிலும் ! இந்தியர்கள் நிறைந்திருந்ததை எப்படியாவது அளிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல் பட்ட இன துரோகி !! மானம் உள்ள எந்த இந்தியனும் , அவன் எதிர் கட்சியாக இருந்தாலும் சரி , ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இவனுக்கெல்லாம் எந்த மரியாதையோ முக்கியத்துவமோ தர கூடாதே ! இவனுக்கு தரும் ஆதரவு நமது சமுதாயத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம் !