அரசியல்வாதிகள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். அதை அவர்கள் நாகரிகமான முறையில் வெளியிட வேண்டும் என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்.
மக்களாட்சி நாட்டில் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் கருத்துரைக்கும் உரிமை உண்டு, அரசாங்கத்தைக் குறைசொல்லும் உரிமை உண்டு. ஆனால், அதை நயமாக உரைக்க வேண்டும். அடுத்தவரை இழித்துரைப்பதோ, அவமதிப்பதோ கூடாது என்றாரவர்.
“கருத்துவேறுபாடு இருக்கலாம், அதற்காக நாம் எதிரிகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. அது நாகரிக அரசியல் அல்ல. அரசியல் பேசும்போது உண்மையான தகவல்களை வைத்துப் பேச வேண்டும்.
“இன்றைய அரசியலில் இது இல்லை. அரசியல் நாகரித்தை மறந்து விடுகிறோம்”, என சாலே இன்று அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.