பக்கத்தான் ஹராபான் சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்தில் ஓர் அரசியல் கூட்டணியாக தன்னைப் பதிவு செய்துகொள்வது சிரமம்தான் என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் நினைக்கிறார்.
“என்னைக் கேட்டால் அது ஒரு சிரமமான செயல்தான். ஏனென்றால், எதிரணி ஒன்றுபட்டிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது.
“அதைப் பதிவு செய்து விட்டால் எதிரணியை உடைப்பதற்காக இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் பலனின்றிப் போய்விடும்”, என ஜைட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஹராபான் பதிவு செய்யப்படுவதற்கு அரசியல் அழுத்தம்தான் தடங்கலாக இருக்கும் வேறு தடங்கல்கள் இல்லை என்று இப்போது டிஏபி உறுப்பினராகவுள்ள ஜைட் கூறினார்.