முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் 22 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்தபோது தாம் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவில்லை குறைகூறப்படுவது உண்மையோ உண்மை என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.
அவரது ஆட்சிக்காலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களே இல்லை என்று கூறப்படுவதற்கு அவரது பதிலைக் கேட்டதற்கு மகாதிர் அவ்வாறு பதிலிறுத்தார்.
“உண்மைதான். நான் எதுவும் செய்யவில்லைதான். நான் ஒரு கல்லைக்கூட எடுத்து வைத்ததில்லை. எல்லாவற்றையும் தொழிலாளர்கள்தான் செய்தார்கள்”, என்றவர் ஒரு காணொளியில் குத்தலாகக் கூறினார்.
இதற்குமுன் மகாதிர் ஒரு நிகழ்வில் பேசும்போது, தமது ஆட்சியில் அடித்தளம் போடப்பட்டது என்றும் அதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த பயன்படுத்திக்கொண்டது என்றும் மகாதிர் குறிப்பிட்டார்.
மகாதிமிர் சொல்வது முற்றிலும் உண்மை. அல்தான்துயா நஜிப்பின் வங்கி கணக்கில் 260 கோடியை (மக்களின் வரிப் பணம்) நஜிப் புகுத்தவில்லை. எதிர்கட்சிக் காரர்கள் பொய் சொல்கிறார்கள். நஜிப்பின் வங்கி கணக்கில் இந்தப் பெருந்தொகையை புகுத்தியது, வங்கி ஊழியர்கள். ஊழல்வாதிகள் கையில் நம் நாடு சிக்கி சீரழிகிறது.