ஸாகிட்: கிட்டத்தட்ட 1.8 மில்லியன் சட்டப்பூர்வமான அந்நியத் தொழிலாளர்கள் இங்கு இருக்கின்றனர்

Documentedworkers1தற்போது மலேசியாவில் 1.78 மில்லியன் சட்டப்பூர்வமான அந்நியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்தப் புள்ளிவிபரங்கள் குடிநுழைவுத்துறையிலிருந்து பெறப்பட்டவை என்றும் அவை இவ்வருடம் Documentedworkers2ஜூன் 30 வரையிலுமானது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சட்டப்பூர்வமான அந்நியத் தொழிலாளர்கள் பற்றிய விபரம் கீழேதரப்பட்டுள்ளது:

 

1.இந்தோனேசியா 727,870

2 நேப்பாள் 405,898

3 பங்களதேஷ் 221,089

4 மியன்மார் 127,705

5 இந்தியா 114,455

6 பாகிஸ்தான் 59,281

7 பிலிப்பைன்ஸ் 56,153

8 வியாட்னாம் 29,030

9 சீனா 15,399

10 தாய்லாந்து 12,603

11 சிறீலங்கா 5,964

12 கம்போடியா 5,103

13 லாவோஸ் 39