பெல்டா மக்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள “தேர்தல் அன்பளிப்புகள்” கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாக(பெல்டா)த்தைச் சீரமைக்க உதவப்போவதில்லை என பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் கூறினார்.
2013 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இதே போன்றுதான் durian runtuh என்ற பெயரில் ரிம1.7 பில்லியன் வாரி வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஒதுக்கீட்டால் பெல்டா பிரச்னைகள் தீரவில்லை என முகைதின் முகநூலில் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட இடைக்கால உதவிகள் தற்காலிகமாக பெல்டா குடியேற்றக்காரர்களின் சுமையைக் குறைக்கக்கூடும். ஆனால் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகாண உதவாது.
மறுநடவுக் கடன்கள், பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹோடிங்ஸ் பெர்ஹாட்டில் பங்கு வாங்க எடுத்த கடன்கள் போன்ற பிரச்னைகளை அவர்கள் எதிர்நோக்குவதாக முகைதின் கூறினார்