தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; அமைதியான முறையில் நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தரமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை அமைதியான முறையில் எடுத்து வைப்பார்கள், ஆதாரங்களுடான் வாதிடுவார்கள்.
ஆனால், ஆதாரமில்லாமல், வெறும் அனுமானங்களையும் கேள்விப்பட்டதையும் வைத்து வாதாடுவோர்தான் ஆத்திரப்பட்டுப் பேசுவார்கள்.
“முறையான தகவலின்றி வாதாடும்போது அவர்கள் மற்றவர்களின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகக் கத்திப் பேசுவார்கள், கூச்சலிடுவார்கள்”, என சாலே அவரது வலைப்பதிவில் கூறினார்.
“மற்ற நாடுகளில் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படும்போது காலணிகளை விட்டெறிகிறார்கள், மல்லுக்கட்டுகிறார்கள்.
“நம் நாடாளுமன்றத்தில் அது வேண்டாம்”. என்றாரவர்.
இந்த ‘அறிவுஜீவி’ என்ன சொல்ல முயல்கிறார் ? இனி கத்திப்பேசினால், கூச்சலிட்டால் செருப்பால் அடிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறாரா ! தலைவருக்கேற்ற சரியான ‘மூடி’ .
பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், (தற்போது நாடாளுமன்ற கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன) இவருக்கு ஏன் இந்த பயம் வந்தது?