பிஎன் நண்பர்கள்: அன்வாருக்கு மகாதிர் கொடுத்த ‘அன்பளிப்பு’ நினைவிருக்கிறதா?

faceஎதிர்க்கட்சிகள்  மிகவும்  வெறுத்தொதுக்கிய  தலைவர்    என்றால்  அது   டாக்டர்  மகாதிர்   முகம்மட்டாகத்தான்   இருக்க    வேண்டும்.  ஆனால்,  இன்று   அதே  மகாதிரை    அவர்கள்    எதிரணித்   தலைவராக    ஏற்றுக்கொண்டு   போற்றிப்   பாராட்டுகிறார்கள்.

காரணம்,  பக்கத்தான்   ஹராபான்   தலைவர்கள்     பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கையும்   பிஎன்னையும்   எதிர்த்து    நடத்தும்    போரில்   மகாதிர்   தவிர்க்க  முடியாத    ஓர்     அரசியல்    சக்தியாக     திகழ்கிறார். .  எனவேதான்,   கடந்த  காலத்தில்   அவர்   தங்களுக்கு  இழைத்த    அநீதிகளையெல்லாம்  மன்னிக்கவும்  மறக்கவும்    அவர்கள்   தயாராக   இருக்கிறார்கள்.

மறுபுறம்,   அம்னோவும்   பிஎன்   தலைவர்களும்  அவர்கள்   மறந்துவிடக்கூடாது    என்பதற்காகவே   மகாதிர்  பிரதமராக   இருந்தபோது   மேற்கொண்ட      ஓபராசி  லாலாங்,    அன்வார்   இப்ராகிம்  அம்னோவிலிருந்தும்   துணைப்   பிரதமர்   பதவியிலிருந்தும்   விலக்கப்பட்டது   போன்ற   சம்பவங்களை   அடிக்கடி   எடுத்துரைத்து     நினைவுப்படுத்திக்கொண்டு   இருக்கிறார்கள்.

இன்று  காலை   BN Facebook  பக்கத்தில்  அன்வார்  கண்காயத்துடன்   இருக்கும்  படமொன்று   வெளியிடப்பட்டிருந்தது.

அதன்கீழ்,  “பலரும்   மகாதிர்   அன்வாருக்குக்  கொடுத்த  ‘பரிசை’  மறந்து  விட்டார்கள்போல்    தெரிகிறது. துன்  அன்வாருக்குச்  செய்த  ‘நற்செயலை’  நினைவுபடுத்த  விரும்புகிறோம்”,  என்று   எழுதப்பட்டிருந்தது.