நஜிப் பதவி துறந்தாலும், அம்னோவுக்கு திரும்பமாட்டேன், மகாதிர்

 

Mnotoumnoபிரதமர் நஜிப் ரசாக் பதவியிலிருந்து விலகிக் கொண்டாலும், தாம் அம்னோவுக்கு மீண்டும் திரும்பப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் வலியுறுத்திக் கூறினார்.

அவர் அம்னோவை நிராகரித்து விட்டதாகவும், ஏனென்றால் அது ஓர் அழுகிப்போன கட்சி என்றும், அதன் கவனமெல்லாம் இலஞ்சம் வாங்குவதுதான் என்றும் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோவில் மகாதிர் விளக்கம் அளிக்கிறார்.
நஜிப் பிரதமர் பதவியில் இல்லாவிட்டால். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைமை ஏற்றிருந்த அம்னோவுக்கு திரும்பிச் செல்வாரா என்று இப்போது பக்கத்தான் ஹரப்பானின் தலைவராக இருக்கும் மகாதிரிடம் கேட்கப்பட்டது.

“முதலில், நஜிப்பை, அம்னோவை அல்ல, அகற்ற நான் முயற்சித்தேன். ஆனால், அம்னோ மிக மோசமாக அழுகிப் போய் விட்டது என்பதைக் கண்டேன். ஏனென்றால், அவர்கள் முன்னுரிமை அளிப்பது அவர்களுடைய சுயநலம் மற்றும் அவர்களுடைய பணம் ஆகியவை தவிர, சமயம், இனம் மற்றும் மக்களுக்குக்காக போராடுவதில்லை”, என்று கூறிய மகாதிர், அம்னோ இப்போது நஜிப்பால் உருமாற்றம் செய்யப்பட்டு அது தோற்றுவிக்கப்பட்ட காலத்திய நோககத்திலிருந்து வேறுப்பட்ட நோக்கங்களைக் கொண்டிருக்கிறது என்றார்.

“அதனால்தான் நான் அம்னோவுக்குத் திரும்பப் போவதில்லை”, என்றார்.