சுஹாகாம் : ஜி25-ன் இஸ்லாமியப் புத்தகத்தின் தடையை அகற்றுக

Slide1மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), ஜி25 வெளியிட்டுள்ள மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் – அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of Moderation – Islam in a Constitutional Democracy) எனும் புத்தகத்தின் தடையை அகற்றும்படி உள்துறை அமைச்சைக் கேட்டுக்கொண்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஒத்த, ‘இஸ்லாம் ஹடாரி’ கருத்துகளை ஆதரிக்கும் வகையிலேயே அப்புத்தகத்தின் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஆக, அப்புத்தகத்தைத் தடைசெய்ததும் , அச்சகம் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984- கீழ் அதனை அரசாங்கம் மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையும் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக சுஹாக்காமின் தலைவர் டான் ஸ்ரீ ரஷாலி இஸ்மாயில் கூறினார்.

“சுஹாகாம்  பார்வையில், மலேசியர்களிடையே சமாதான முன்னேற்றம் உருவாக,  கலாச்சாரம் மற்றும் மத புரிந்துணர்வைக் கையாளும் வாய்ப்பை அப்புத்தகம் வழங்குகிறது எனக் கருதுகிறோம்,” என இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும், 21 அத்தியாயங்கள் கொண்ட அப்புத்தகத்தின் 11 அத்தியாயங்களில், இஸ்லாம் ஹடாரியுடன் ஒத்துப்போகும், இஸ்லாம் மற்றும் ஷரியா சட்டங்கள் தொடர்பாகவே கூறப்பட்டுள்ளது. இக்கோட்பாடுகளை நமது முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியும் ஊக்கப்படுத்தியுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2015-ல், சிங்கப்பூர் மார்ஷல் கவெண்டிஸ் இண்டர்நேசனல் (ஆசியா) வெளியீடு செய்த  அப்புத்தகத்தை, Slide2பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன எனும் காரணத்தைக் கூறி, மலேசிய உள்துறை அமைச்சு நேற்று தடை செய்தது.

மலேசியாவில் இனங்களுக்கு இடையிலான உறவு, இஸ்லாம் மற்றும் தீவிரவாதப் போக்கு குறித்து கவலைக் கொண்ட முன்னாள் உயர்மட்ட மலாய்-முஸ்லிம் அரசு ஊழியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர்,  கடந்த டிசம்பர் 2014-ல், அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம் குறித்து அறிவார்ந்த ரீதியில் விவாதங்கள் நடத்த, ‘ஜி25’ அமைப்பைத் தோற்றுவித்தனர்

இதற்கிடையே, ஜி25 அமைப்பின் பேச்சாளர் நூர் ஃபரீடா அரிப்பின், மிதமான இஸ்லாத்தை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரைகளைக் கொண்டுள்ள அப்புத்தகத்தைத் தடை செய்ததற்கான காரணத்தை உள்துறை அமைச்சு விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.