அதன் தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு விலகி பார்டி அமனா நெகராவை அமைத்தார்கள் என்பதற்காக பாஸ் பலவீனமடைந்திருப்பதாக பக்கத்தான் ஹராபான் நினைப்பது தவறு என்கிறார் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர்.
பிகேஆர், அமனா, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆகிய கட்சிகளின் மூலமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் ‘மலாய் சுனாமி’ ஒன்று நிகழப்போவதாக எதிரணி, குறிப்பாக டிஏபி தப்புக்கணக்கு போட்டிருக்கிறது என ஜம்ரி கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது.
“மாட் சாபு சில தலைவர்களுடன் சேர்ந்து அமனாவை அமைத்தபோது பாஸ் விழுந்து விடும் என்று எதிர்பார்த்தார்கள். பாஸ் பலவீனமானது என்று நினைத்தார்கள். நான் ஒன்றும் பாஸுக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், அவர்களின் கணக்கு தப்பு என்றுதான் நான் நினைக்கிறேன்”, என்று நேற்று கிரிக் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் ஜம்ரி கூறினார்.