மலேசியா கடந்தகால வெற்றிகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியும் “வியக்க வைக்கிறது” என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி.
இன்று கம்போங் பாருவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ஜாஹிட், மக்கள் இப்போதைய ஆட்சியை எண்ணியும் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.
நீண்ட காலம் ஆட்சி செய்த ஒருவரையே- அவருடைய பெயரை அவர் குறிப்பிடவில்லை- நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், “இப்போதைய ஆட்சியும் அற்புதமாக செயல்படுவதை ஒப்புக்கொள்ளுங்கள்”, என்றார்.
ஜாஹிட், பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் மலேசியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டைத்தான் குறிப்பிடுவதுபோல் தெரிகிறது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அலங்கோல ஆட்சியையும்-பில்லியன் டாலர் நன்கொடையையும்தான் ஜாஹிட் ஹமிடி.குத்தலாக “வியக்க வைக்கிறது” என்கிறார்.
திரு நஜிப் அவர்களுக்கு திரு ஜாஹீட் ஹமீடின் குத்தல் பேச்சி விளங்கவில்லையோ ? திரு ஜாஹீட் ஹமிடியின் உள்வேலை இன்னும் திரு நஜிப் அவர்களுக்கு தெரிவில்லை போலும் ? பொறுத்திருந்து பார்ப்போம் !
ஆம்,உண்மைதான். இப்போதுள்ள ஆட்சி அற்புதமான ஆட்சி என்று பதவியில் இருந்து “அனுபவிக்கும்” உங்களை போன்றவர்கள் தான் பேச முடியும். அரசியல் இலாபம் பெறுபவர்களைத் தவிர்த்து பொது மக்கள் கூறவில்லையே. ஜி.எஸ்.டி. அமுல் படுத்தப் பட்டப் பிறகு பொருள்களின் விலை 40 முதல் 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவும் தே.மு. ஆட்சி செய்த அற்புதங்களில் ஒன்று. இவை எல்லாம் உங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக 13 .50 ரிங். சமையல் எண்ணெய் இப்பொழுது 24 . 60 ரிங் விலையில் விற்கப்படுகிறது. இதுவும் தே.மு. செய்த அற்புதம் தான்.