அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) , 1எம்டிபி- தொடர்புடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்காக தொடுக்கும் வழக்குகளைப் பார்வையிட வழக்குரைஞர்களை அனுப்ப சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (ஏஜிசி) திட்டமிடவில்லை.
புத்ரா ஜெயா, சட்ட ஆளுமையையும் வழக்கு தொடுக்க டிஓஜே-க்குள்ள உரிமையையும் மதிக்கிறது என பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார்.
“அமெரிக்க நீதித்துறை சிவில் வழக்கு தொடுத்திருப்பதையும் குற்றச் செயல்களுக்கு எதிராக யார்மீதும் குற்றவியல் வழக்கு தொடுக்கப்படவில்லை என்பதையும் அதன்மீது நீதிமன்றம் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்பதையும் மலேசிய அரசாங்கம் கவனத்தில் கொள்கிறது”, என அஸலினா நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய ஒரு பதிலில் கூறினார்.
அஸ்மான் இஸ்மாயில் (பிகேஆர்- கோலா கெடா) டிஓஜே வழக்குகளைப் பார்வையிட புத்ரா ஜெயா வழக்குரைஞர்களை அனுப்பி வைக்குமா என்று கேட்டதற்கு அஸலினா இவ்வாறு பதிலளித்தார்.
சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) டிஓஜே வழக்குகளைப் பார்வையிட ஏஜிசி வழக்குரைஞர்களை எப்படி அனுப்புவார்.
இதற்கு முன்னர் நஜிப்பின் வழக்குரைஞர்கள் WSJ விவகாரத்தில் மூக்கறுக்க பட்டதை அவ்வளவு எளிதில் சட்டத்துறை தலைவரால் மறக்க முடியுமா ?
சட்டதைப்பற்றி தெரியாத , ஆங்கிலம் புரிந்துக்கொள்ள முடியாத நபர்கள் எல்லாம் சட்டத்துறை தலைவர்களாகவும் , அமைச்சர்களாகவும் இருப்பது ஆச்சிரியமே, அவை மலேசியாவில் மட்டுமே பார்க்கமுடியும் , வினை நற்றவன் வினை அறுப்பான் என்பது திரு மகாதீர் அவர்கள் நன்கு உணர்வார் என அறிகிறேன்.