பொதுத் தேர்தல் நெருங்க, நெருங்க, அரசியல்வாதிகள் ஒருவர் மற்றவரின் குடும்பப் பூர்விகத்தை எல்லாம் அம்பலப்படுத்தத் தொடங்கி விட்டனர்.
நேற்று, அம்னோ நிகழ்வு ஒன்றில் பேசிய துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் இந்திய வம்சாவளியினர் என்று கூறியிருந்தார். அதற்கு ஆதாரமாக அவரது அடையாள அட்டையில் “Mahathir a/l Iskandar Kutty” என்றிருப்பதாகவும் சொன்னார்.
இதை மறுத்த மகாதிரின் புதல்வர் முக்ரிஸின் ஆதரவாளர் மன்றம், இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்தவர் மகாதிரின் தாத்தா என்றும் தந்தை அல்ல என்றும் முகநூலில் விளக்கமளித்துள்ளது.
“இஸ்கண்டார் ஜோகூரைச் சேர்ந்த சித்தி ஹாவைவை மணந்தார். அவர்களுக்கு முகம்மட்(மகாதிரின் தந்தை) 1881-இல் பிறந்தார். முகம்மட் வான் தெம்பாவான் பிந்தி வான் ஹனாவியை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் துன்”, என்று அது கூறிற்று.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போது குரல்வலிக்கு வந்து விட்டது அரசியல் சிந்துச்சண்டை ! யார் உனக்கு அப்பன் ? என்ற சினிமா பாடல்கள் போல் அரசியலில் உன் அப்பன் யார் ? இவன் அப்பன் யார் ? என்ற அநாகரீக பேச்சுகள் தலைதூக்கிவிட்டன ! இந்திய , பாகிஸ்தானிய , கேரளா வம்சாவளி இதில் மாமாக் வேறு ? ஆனால் இந்தோனேஷியா ஜாவா வம்சாவளி பற்றி பேசமறுப்பது ஏன் ? முக்கால்வாசி அரசியல் தலைவர்கள் ஜவாகாரன் ! எல்லோரையும் DNA பரிசோதனை செய்தால் உண்மைவரும் ! நாடு ….. நாசமா போச்சு !!
ராஜா ராஜா சோழனின் கடாரம் தந்த இந்தியன் தான் இந்த மலையகத்தை 22 ஆண்டுகள் ஆண்டுகொண்டிருந்தான் எனும் உண்மையை நினைக்கும் போது,கேட்துருநான் இந்தியா என்ற நமக்கெல்லாம் பெருமையாக தான் இருக்கிறது !!
மகாதீர் சுயசரிதையில் தனது தந்தை கோபம் வந்தால் தமிழில் திட்டுவார் என்று உள்ளது
கங்கை கொண்டான் ..கடாரம் வென்றால் என்று புலம்பி தமிழ் நாடடை(என்ஜின். இல்லாத கார் மாதிரி ) அழித்தார்கள்
இந்திய என்ற நாடு 70 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லை சோழர் ஆண்ட 11 ம் நூறாண்டில் இந்தியர் என்ற பெயரே இருந்து இருக்காது ..தமிழர்கள் என்று தான் சொல்லி இருப்பார்கள் மியன்மாரில் பாவிக்கப்படும் சோழிய….மலேசியாவில் பாவிக்கப்படும் சுலோன் எல்லாம் சோழர்களை குறிப்பு ஈடுபவை
மேற்கத்திய நாடுகளில் மனிதர்களை மனிதர்களாக பெரும்பாலும் பார்க்கின்றனர்-இல்லாவிடில் அங்கு குடி பெயரமுடியாது. ஆனால் இங்கு துருவி துருவி ஆராய்ச்சி நடக்கிறது. எல்லாமே காக்காத்திமிரினால் வந்த வினைகள். தன் வினை தன்னைச்சுடும். இவன் பிரதமனாக இருந்தபோது அவனை நக்கியவன்கள் இப்போது குறை கண்டு ஆர்பரிக்கின்றான்கள். இதுதான் மூன்றாம் உலக 21 வது நூற்றாண்டு.
சரி.மகாதீர் இந்திய வம்சாவளியினராகவே இருக்கட்டும் ஐயா. இங்கு உள்ள இந்திய வம்சாவளியினருக்கு எவ்விதமான உதவியோ அல்லது வசதியோ செய்ததாக வரலாறு இல்லையே. எல்லா மேம்பாட்டுத் திட்டங்களிலும் மலாய்க்காரர்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டது. தோட்டப்புறங்களில் இருந்து தமிழர்களை விரட்டியது தான் அவர் செய்த சாதனையும் செய்த உதவியும்.
சீன வம்சாவளியான படாவி, இந்தோனேசிய வம்சாவளியான நஜிப்-ஹமிடி ஆகியோர் மலாய்க்காரர்கள் ஆக முடியும்போது, இந்திய வம்சாவளியான மகாதீர் மலாய்க்காரர் ஆனதில் தவறு ஒன்றும் இல்லையே.
தனது வம்சாவளி தெரிந்தும் நான் மலாய்க்காரர் என்று நா கூசாமல் கூறுவது தங்கள் பிறப்பை தாங்களே கேலி செய்து கொள்வதற்கு சமம்.
என்ன மகாதீர் இந்தியர்களுக்கு உதவவில்லையா !! தானை தலைவன் யாரால் கோடிஸ்வரன் ஆனார் !! அனந்த கிருஷ்ணன் மகாதீரின் தோஸ்து ! தோட்டத்து தமிழனுக்கு தான் அவரின் துரோகம் அது உம் தானை தலைவனின் தலைமையில் அரங்கேறியது !! எய்தவனை விட்டு அம்பை ஏன் குறை கூற வேண்டும் !!
ஒரு மலையாள காக்காவான மகாதீர் எவ்வளவு தவறு செய்தாலும் அவரை ஒரு மலையாளி என்று ஒரு மலையாளியால் சொல்ல முடியவில்லை! நாம் சாமிவேலுவை தமிழன் என்று சொல்லுகிறோம். ஒரு இந்தியன் என்று சொல்லுவதில்லை! இப்படியெல்லாம் சொல்லுவதற்கும் யோசிப்பதற்கும் நாமும் பழக வேண்டும்!
கேரளாவிலிருந்து வந்தவர் மகாதிரின் தாத்தா இது குறிப்பு அது
வந்தேறிகள் அடடவனையில் இருப்பது உண்மைதானே. நம்மை
பார்த்து வந்தேறிகள் என்று சொன்னவர்கள் சொல்லிவந்தவர்கள் இப்போ என்ன சொல்ல போகிறார்கள். உண்மையாக உழைத்த நாம் – நம் சமுதாயதை அடியில் இருந்து வெட்டி சாய்க்க என்ன என்ன வேலை செய்தார்கள். இன்று ஆண்டவன் பார்க்கிறான். உலக மகா தலைவர் அவர்களுக்கு கேள்வி மேல் கேள்விகள். அவருடன் சேர்ந்து நம்மை சாகடித ஒரு தமிழன் பேசாமல் இருக்கிறான். அவனும் பேசணும் இன்று. அரசாங்க பதவியில் இருந்த தமிழன்கள் இன்று எண்ணிவிடலாம். அன்று மகா இந்த தலைவர் வந்த பிறகு
விழுந்தோம். இன்றும் ….
தனது முன்னோர்கள்
இங்கு எதற்காக வந்தார்கள் என்பன இப்போ
ஐயா மகாதிர் அவர்களே…
நீங்கள் இந்திய சமுதாயத்துக்கு செய்த துரோகத்தையும், பிரிட்டிசார் வழங்கிய எங்கள் சலுகைகளை பிடுங்கியதையும் விவரித்து எழுத ஆரம்பித்தால் அது ஒரு தொடர் கட்டுரையாகிவிடும் என்பதால் ரத்தினச் சுருக்கமாக நாலே வரிகள்:
1. நாங்கள் (இந்தியர்கள்) தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள்; மற்றவர்கள் செய்த நன்றியையும் என்றும் மறக்காதவர்கள். இதி உலகே அறியும்.
2. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள். நாட்டின் சுதந்திர தந்தைக்கு அவரின் அந்திம காலத்தில் நீங்கள் ஏற்படுத்திய மன உளைச்சல் இன்று உங்களின் அந்திம காலத்தில் உங்களை வந்தடைந்திருக்கிறது. மிதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
3. தினை விதைத்திருந்தால் தினை அறுக்கலாம். வினை விதைத்தாகிவிட்டது வினையை அறுவடை செய்யும் நேரம் இது. அதுவே இப்போது நடக்கிறது.
4. நீங்கள் அன்று ‘கொண்டீர்கள்’. ஆனால் அன்று நின்று கொண்ட தெய்வம் இன்று ‘கொள்கிறது’. விரைவில் உமது வாயாலேயே ‘இந்திய சமுதாயத்துக்கு’ என் ஆட்சி காலத்தில் நான் துரோகங்கள் பல செய்து விட்டேன் என்று நீங்கள் அலறும் (கதறும்) நாள் வரும். (அதுவரை நீங்கள் நலமாகவே இருப்பீர்கள்). நாட்டின் வளப்பத்திற்கு இந்திய சமுதாயம் சிந்திய ரத்தம் பலன் தராமல் போகாது. இனி எஞ்சிய காலத்தில் வஞ்சகம், சூது ஏதும் செய்யாமல் ‘நமது’ கோயில் குளங்களுக்கு புறப்படுங்கள் புண்ணியம் தேடி…!
மகாதீர் நமக்கு செய்த கேடுகளை மன்னிக்க முடியாது. அவர் தலைமை தாங்கும் கூட்டணியை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்.
narayanan அவர்களுக்கு மிக்க நன்றி ! நாதாரி மகாதீரை தோளில் குந்த வைத்து கூத்தாட ஆரம்பித்துவிட்டது எதிர்க்கட்சி!! மகாதீர் நமது சமூதாயத்துக்கு செய்த அநியாயங்கள் இன்றய நமது தலைமுறைக்கும் தெரியவில்லை !!! இந்த சமூதாயத்தை இளிச்சவாய் சமூதாயம் என்பதா ? அல்லது முட்டாள் சமூகம் என்று தீர்மானித்து ஒதுங்கிக்கொள்வதா ? ஒன்றும் புரியவில்லை !!!!
பி என் இருக்கும் கழிசடை தலைவர்களை விட இந்த காக்கா மகாதீர் நல்லவரே. இவர்காலத்தில் இந்தியர்களுக்கு கிடைத்த அனைத்தையும் சுருட்டியது ம இ கா வும் சாமிவேலுவும் தான். இம்முறையானது நம் மலேஷியா நாடும் மக்களும் வளம் பெற எதிர்கட்சியை ஆட்சியில் அமரவைக்க வேண்டியது நம் எல்லா இந்தியர்களின் கடமையாகும். உலகமே ஆட்சி மாற்றம் கண்டு விட்டது. நம் நாடு மட்டும் தான் தமிழ்நாட்டை போல பின்னோக்கி சென்று கொண்டியிருக்கிறது.