இந்தோனேசிய வம்சாவளி மலேசியப் பிரதமராக இந்திய வம்சாவளியின் உதவியை நாடியதாம்

 

 

IndoIndianதுணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி பிரதமர் நஜிப்பை அகற்றிவிட்டு அப்பதவியில் தாம் அமர்வதற்கு ஆதரவும் அனுதாபமும் காட்டுமாறு தம்மிடம் கேட்டுக்கொண்டதை முன்னாள் பிரதமர் மகாதிர் நினைவுகூர்ந்தார்.

மேல்விபரம் எதுவும் மகாதிர் அளிக்கவில்லை. அவர்களுக்கிடையில் நடந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது ஸாகிட்டிற்கு ஞாபகம் இருக்க வேண்டும் என்றாரவர்.

“ஸாகிட் துணைப் பிரதமரான போது, அவர் என்னைப் பார்க்க வந்து எனது அனுதாபத்தையும் ஆதரவையும் பெற முயன்றார்.

“நான் ஸாகிட்டிடம் உண்மையைக் கூறினேன்: நஜிப் பதவியை விட்டு விலகினாலும், அது நடக்க முடியாத ஒன்று, யார் நஜிப்பின் இடத்தை நிரப்புவது என்ற முடிவை அம்னோ எடுக்கும் வரையில் ஸாகிட் காத்திருக்க வேண்டும்.” இதைக் கூறும் மகாதிரின் வீடியோ பதிவு பெர்சத்து மலேசியா முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

“ஆக, அவருக்கு எனது அனுதாபம் தேவைப்படும் போது என்னிடம் வருவார். இப்போது அது கிடைக்காத போது, இம்மாதிரியான பொய்யைச் சொல்வதற்கான வழியைத் தேடுவார்”, என்று ஸாகிட் அவரது இந்தியப் பின்னணி பற்றி கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய மகாதிர் கூறினார்.

மகாதிர் அவரது 22 ஆண்டுகால ஆட்சியில் சுயநலத்திற்காக மலாய்க்காரர்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஸாகிட் குற்றம் சாட்டியிருந்தார்.

இம்மாதிரியான ஒரு ஜென்மம் அமைச்சரவையில் இருக்க முடிகிறதே என்று நான் வெட்கப்படுகிறேன் என்று மகாதிர் மேலும் கூறினார்.