முன்னாள்பிரதமர் மகாதிரின் தனிப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பார்டி பிரிபூமி பெசத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பிரிவு கோருகிறது.
துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கும் தேசிய பதிவு இலாகா தலைமை இயக்குனர் முகமட் யாஸிட் ரமலிக்கும் மன்னிப்புக் கோர ஒரு வாரகால அவகாசம் கொடுத்துள்ளனர்.
செய்யாவிட்டால், மேல்நடவடிக்கு குறித்து பெர்சத்து முடிவெடுக்கும்.
நேற்று, கெலானா ஜெயா அம்னோ தொகுதி கூட்டத்தில் பேசிய ஸாகிட், மகாதிரின் இயற்பெயர் மகாதிர் த/பெ இஸ்கந்தர் குட்டி என்று கூறியிருந்தார்.
இதற்கு நேற்று எதிர்வினையாற்றிய மகாதிர், ஸாகிட் ஒரு பொய்யர் என்று கூறினார்.
அதெல்லாம் தேவையில்லை ! மகாதீர்தான் இந்தியர்களிடம் மன்னிப்பு கேற்க வேண்டும் ! காரணம் இந்தியர்கள் இந்த நாட்டில் பின் தங்கியுள்ளோம், அதுவும் மகாதீர் காலத்தில் !
Dhilip 2! வாயை பொத்திண்டு கம்முனு இருங்கோ சார். அவர்களுக்குள்ளே மோதுண்டு போகட்டும். நாற்காலியை இழுத்து வைத்துக்கொண்டு வேடிக்கை பாருங்கோ.