ஐபிஐசிக்கு பணம் கொடுக்க வேண்டிய காலக்கெடுவை 1எம்டிபி தவறவிட்டு விட்டது

 

1mdpdeadlineஇன்டர்நேசனல் பெட்ரோலியம் கம்பனிக்கு (ஐபிஐசி) இன்று மதியத்திற்குள் பணம் ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய காலக்கெடுவை 1எம்டிபி தவறவிட்டு விட்டதாக ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி த எட்ஜ் மார்க்கெட்ஸ் கூறுகிறது.

நியுயோர்க் நேரப்படி நேற்று ஜூலை 31 நள்ளிரவில் (மலேசிய நேரப்படி இன்று மதியம்) பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பணம் கொடுக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று த எட்ஜ் கூறிய அதே வேளையில், பணம் கொடுப்பதற்கான காலத்தை நீட்டிப்பதற்கு அந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்படிருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று த எட்ஜ் மேலும் கூறியது.

பணம் கொடுப்பதற்கான காலக்கெடு தவறி விட்டது என்று கூறுவது பற்றி ஐபிசி இன்னும் எவ்வித அறிக்கையும் விடவில்லை.

அவ்வாறே, மலேசிய அரசாங்கமும் பணம் கொடுக்கப்படுவது பற்றி அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடவில்லை.

தீர்வு ஒப்பந்தப்படி 1எம்டிபி மொத்தம் யுஎஸ்$1.205 பில்லியனை (ரிம5.16 பில்லியன்) ஐபிஐசிக்கு கட்ட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து மலேசியாகினி 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமியுடன் தொடர்பு கொண்டுள்ளதுடன் அவரின் பதிலுக்காகக் காத்திருக்கிறது