துயரத்தில் மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா

 

Speakerunhappyநாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அவர் அவையில் எடுக்கும் முடிவுகளுக்கு நீதிமன்றத்தில் சவால் விடப்படுவது குறித்து மகிழ்ச்சியற்றவராக இருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்குச்சிக்கல் எதையும் எழுப்பமாட்டார்கள் என்று தாம் நம்புவதாக கூறிய பண்டிகார், “நீங்கள் அதைச் செய்தால் நான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இப்போது அவைத்தலைவர் முடிவு எடுக்க முடியாது ஏனென்றால் அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்”, என்றாரவர்.

பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 63(1) அதன் அர்த்தத்தை இழந்து விட்டது என்று மக்களவையின் அமர்வில் அவர் இன்று கூறினார்.

அப்பிரிவு, நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் அவற்றின் எந்த ஒரு குழுவும் எடுக்கும் முடிவு மீது நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது என்று கூறுகிறது.

ஆனால், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியன் 1எம்டிபி பற்றிய அவரது இரண்டு கேள்விகளை நிராகரித்து பண்டிகார் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவரது முடிவைத் தற்காத்து பேசிய பண்டிகார், மக்களவையில் இப்போதெல்லாம் விவகாரங்கள் மிக சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன என்பதோடு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தருக்கமுறைக்கு ஈடுகொடுப்பது கடினமாக இருக்கிறது என்றார்.