ரொக்கமாக பணம் கொடுத்தல் மலாய்க்காரர்கள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டதை மறந்துவிடச் செய்யாது என்று மகாதிர் முகமட் கூறினார்.
“மலாய்க்காரர்கள் முட்டாள்கள் என்று நஜிப் நினைக்கிறார். (அவர்) மலாய்க்காரர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கிறார் ( வங்கிக் கணக்கிலிருந்த யுஎஸ்$600 மில்லியன் என்ன ஆயிற்று என்று கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்).
“ஆனால், நஜிப் நினைப்பது போல் மலாய்க்காரர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. காணாமல் போய்விட்ட பணம் அவர்களுடையது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டு விட்டனர். அந்தக் கடனை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அடைக்க வேண்டும்”, என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அக்கடன்களை பொதுமக்கள் உயர் வரிகள், ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உட்பட, மூலம் அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மகாதிர் கூறினார்.
ஆமாம் மலாய்க்காரர் மடையர் அல்ல. அவர்களும் இன்று விழித்துக் கொண்டார்கள். ஆனால் ஒட்டு யாருக்கு?
மலாய்க்காரர்கள் பிரச்சினைகளை பற்றி, மலாய்க்காரர் அல்லாதவர் கருத்துக் கூறலாமா?
உண்மைதான் மலாய்க்காரர்கள் மடையர்கள் இல்லை அவ்வளவு மடையர்கள் அல்ல. சரியாக உங்களை பயன் படுத்தி கொண்டார்கள். நீங்கள் ஒரு ஹிந்து பாரம் பரிய இருந்து வந்தவர் என்று கூறும் மலாய்க்காரர்கள் மடையர்கள் இல்லை. நாங்கள் தெரு ஓரம் வந்து போராடினோம் எங்கள் உறுமியை அன்று தெரு ஓரம் வந்து உங்களை கேட்டொம் நீங்கள் ஒரு சர்வாதிகாரம் ஆட்சியை கொண்டு எங்கள் உரிமையை அடக்கினார்கள். அன்று விழுந்தோம். இன்றும் தலை தூக்க முடியவில்லை ஐய்யா. எங்களுக்கு காக போராடிய எங்கள் தலைவர்களை நீங்கள் கூப்பிட்டு பேசியிருந்தால் நங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து இருப்போம். மலாய்க்காரர்கள் மிகவும் சரியான அறிவாளிகள் உங்களை வைத்தே சரியான பாதையில் நன்கு பயன் படுத்தி கொண்டார்கள். அனல் இன்றைய பிரதமர் எங்களுக்கு நிறைய செய்தற் மறுப்பு இல்லை. இவர் என்ன தமிழ் பிரதமர என்று கூட சொல்லப்படது மலாய்க்காரர்கள் மத்தியில். அவர் கவலை படவில்லை. அவரின் தனிபாட்ட விசயம்.
இது மக்கள் ஆட்சி மலேசியா- எல்லாமலேசியர்களும் கருத்து கூற முடியும். ஆனால் அரசியல் ஈன வாதிகளும் இன மதவாதிகளும் (யார் என்று நான் கூற தேவை இல்லை) தங்களின் சுய நலத்திற்காக பிரச்சனையை கிளப்பிவிட்டு கருத்து கூறுபவர்களை நாட்டு துரோகிபோல் காண்பிக்கின்றனர்.