ரஃபிஸி பத்து நாள்களில் ரிம1.5 மில்லியனுக்கு மேல் திரட்டினார்

 

Rafizicollectsதமக்கு நீதிமன்றம் விதித்துள்ள ரிம300,000 அபராதத்தைச் செலுத்துவதற்கு நன்கொடை அளித்து உதவுமாறு பத்து நாள்களுக்கு முன்பு பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

என்எப்சி வழக்கில் ரஃபிஸிக்கு இந்த அபராதம் விதிக்கப்படது.

தமது வேண்டுகோளை ஏற்று மக்கள் மிகப் பெரும் தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர் என்று இன்று மாலை, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி அறிவித்தார்.

தாம் செலுத்த வேண்டிய அபராத் தொகையைவிட ஐந்து மடங்கு அதிகமான நன்கொடை கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

பெற்ற நன்கொடை ரிம1,585,014.49 என்று அவர் அறிவித்தார். நன்கொடை அளித்த 5,135 பேரில் 1,575 பேர் மலாய்க்காரர்கள், 2,903 பேர் சீனர்கள் 348 பேர் இந்தியர்கள், 40 சாபா பூமிபுத்ராக்கள் மற்றும் 91 சரவாக் பூமிபுத்ராக்கள். நன்கொடை வழங்கியவர்களின் வழங்கியவர்களின் விபரங்கள் இருக்கின்றன..

மேலும், 2,300 பேர் டிபோஸிட் மெசின் வழியாக நன்கொடை அளித்துள்ளனர்.

தாம் நன்கொடை திரட்ட சென்ற போது தமக்கு கிடைத்த ஆதரவு தம்மை நெகிழ வைத்தது என்று கூறிய ரஃபிஸி, கடந்த வாரம் தெமெர்லோவில், ஓரு வயதான மூதாட்டி தமக்கு ரிம20 தும் அதனுடன் தம்மை ஊக்குவிக்கும் குறிப்பு ஒன்றையும் தந்ததாக அவர் தெரிவித்தார்.

பிகேஆருக்கும் பாஸுக்கும் இடையில் பிளவு இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் வகையில் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொக்கமாக நன்கொடை அளித்தனர் என்று ரஃபிஸி மேலும் கூறினார்.

நன்கொடை குறித்த முழு விபரமும் அளிக்கப்படும் என்றாரவர். கடந்த ஒரு வாரத்தில் மலேசியர்கள் இன, சமய, பொருளாதார மற்றும் வர்க்க வேறுபாடின்றி ஒன்றுபட்டு ஒரு நோக்கத்தை வெளிப்படுத்தினர்: “ஊழலை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தருவர்” என்று ரஃபிஸி மேலும் கூறினார்.