அஷாலினா : நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு எதிர்க்கட்சியினர் கலங்கம் விளைவிக்கின்றனர்

azalina & heeபெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியன், அவைத் தலைவர் பண்டிகார் அமினுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நடவடிக்கையானது, நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிப்பதாக உள்ளது என அமைச்சர் அஷாலினா ஒத்மான் கூறியுள்ளார்.

“இந்நடவடிக்கையானது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நாடாளுமன்ற சுதந்திரத்தை அலட்சியப்படுத்துவது போல் உள்ளது”, என இன்று, அவர் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

ஹீ லோய் சியன் 1எம்டிபி பற்றிய அவரது இரண்டு கேள்விகளை நிராகரித்த பண்டிகார் முடிவுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவு செய்தார்.

அரசியலமைச் சட்டப்பிரிவு 63 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் உரிமைகள், சலுகைகள் குறித்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், ஹீ புரிந்துகொள்ள வேண்டும் என அஷாலினா கூறியுள்ளார்.

“அச்சட்டப்பிரிவின் படி, நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. ஆக, அந்த பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர், பண்டிக்கார் மீது வழக்கு தொடருவது வீண் வாய்ச் சவடால்,” என அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.