எம்எசிசி: ஸாகிட்டின் ரிம230 மில்லியன் பற்றி இப்போதைக்கு கருத்து ஏதும் இல்லை

 

nocommentMaccஇருபது ஆண்டுகளுக்கு முன்பு அஹமட் ஸாகிட் ஹமிடி, இப்போது துணைப் பிரதமர், அவரது வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன் வைத்திருந்தது குறித்து கருத்து ஏதும் கூறுவதற்கில்லை என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) இன்று தெரிவித்தது.

“கருத்து இல்லை”, என்று எம்எசிசி துணைத் தலைமை ஆணையர் முகமட் ஜமிடான் அப்துல்லா இந்த விவகாரத்தில் ஸாகிட் மீது விசாரணை தொடங்குமா என்று கேட்ட போது கூறினார்.

“பிறகு, பிறகு. நாங்கள் பிறகு கருத்து கூறக்கூடும். பிரச்சனை இல்லை”, என்று தொடர்ந்து கேள்வி கேட்ட போது கூறினார்.

இது குறித்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் ஜமிடான் மீண்டும் “கருத்து இல்லை” என்று கூறினார்.

மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில், ஸாகிட் அவருடைய வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன் இருப்பதாக அவருடை சொத்து விபரங்களைத் தெரிவிக்கையில் கூறியதாக மகாதிர் தெரிவித்துள்ளார்.