ஸைட்: இந்தியர்கள் வாக்குகளைப் பெற வேதமூர்த்தியைப் பிடியுங்கள்

 

Getwathaஇந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு பக்கத்தான் ஹரப்பான், பெர்சத்துவான் ஹிண்ட்ராப்பையும் அதன் தலைவர் பி. வேதமூர்த்தியையும் அதனுடன் சேர்த்துகொள்ள வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.

இந்தியச் சமூகத்தின் மீது அந்த இயக்கம் கொண்டிருந்த தாக்கத்தை தாம் நேரடியாக அறிந்துள்ளதாக ஸைட் அவரது வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்துள்ளார்.

“பாரிசான் போலல்லாமல், பக்கத்தான் ஹரப்பான் இந்திய இனக் கட்சியைக் கொண்டிருக்கவில்லை. பிகேஆரிலும் டிஎபியிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அக்கட்சிகள் இந்திய இனத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

“ஏராளமான ஏழை இந்தியர்கள் இன்னும் தோட்டங்களிலும் நகர்புறங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்நாட்டிலுள்ள இதர இனங்களைப் போல் இனச்சார்புடையவர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய இனம் சார்ந்த அமைப்புடன் அவர்கள் ஆறுதலாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.

“பெர்சத்து அனைத்து-மலாய்க்காரர் கட்சியாக இருந்தால் மட்டுமே நம்பும் உணர்வுடையவர்களாக மலாய்க்காரர்கள் இன்னும் இருக்கையில், டிஎபி பெரும்பான்மை சீனர் கட்சியாக இருப்பதால் சீனர்கள் அக்கட்சியை நம்பும் நிலை இருக்கையில், இந்தியர்களும்கூட தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இந்தியர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சியின் வழி இருக்க வேண்டும் என்ற தவிர்க்க இயலாத முடிவை ஏற்றுக்கொள்வதில் நாம் நியாயமாக இருக்க வேண்டும்”, என்று ஸைட் எழுதியுள்ளார்.

ஹிண்ட்ராப் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவே மாட்டாது என்பதை உண்மை என்று ஒப்புக்கொள்ள வேண்டிய Zaidstopbickeringநிலையில், ஜொகூர், பேராக், கெடா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் தீர்வுக்குரிய இந்தியர் வாக்குகளைத் திரட்டுவதற்கு “வேதாவும் அவரது நண்பர்களும்” ஹரப்பானுக்கு இன்னும் உதவக்கூடிய நண்பர்களாக இருப்பார்கள்கள் என்று ஸைட் மேலும் கூறுகிறார்.

வேதமூர்த்தியைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் அவ்வளவு மோசமானவராக இருக்க முடியாது, ஏனென்றால் நஜிப் காட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்களுக்கான பல பெருந்திட்டங்களில் கூறப்பட்டிருப்பவைகளிலிருந்து எதுவும் கிடைக்காத நிலையில், அவர் தமது துணை அமைச்சர் பதவியைத் துறந்திருக்கிறார்.

மேலும், அவர் ஓரங்கட்டப்பட்டுள்ள இந்தியச் சமூகத்தின் பல பிரச்சனைகளை நாம் தீர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார் என்று ஸைட் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் சில ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை கடந்த காலத்தில் முன்வைத்திருக்கலாம். இந்த நாட்டில் அப்படி ஏதும் செய்யாவிட்டால், எப்படி சுகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை குலுக்கி எடுத்து அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்?, என்கிறார் ஸைட்.