ரவுஸ் இன்றிரவு தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்

 

Rausswearinதலைமை நீதிபதி முகமட் ரவுஸ் பதவியிலிருந்து ஓய்வு பெறும் 66 வருடம் 6 மாத வயதை நேற்று அடைந்தார்.

நீதிபதி ரவுஸ் இன்றிரவு மணி 10.00க்கு இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்துவான் அகோங் முன் தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று சைனா பிரஸ் ஓர் அதிகாரப்பூர்வமான அழைப்பை மேற்கோள் காட்டி கூறுகிறது.

கடந்த மாதம், பிரதமர் அலுவகம் நீதிபதி ரவுஸ் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மகினுடின் ஆகியோரின் பதவிகாலம் முறையே மூன்று மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அவர்களது நியமனம் பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 122(1A) கீழ் செய்யப்பட்டது.

பல தரப்பினர், முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் மற்றும் முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி கோபால் ஶ்ரீராம் உட்பட, இந்த சேவைக்கால நீட்டிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பு தமக்கு இன்னும் கிடைக்கவில்ல என்று தெரிவித்தார்.