கட்கோ நிலப் பிரச்சனை இன்னும் தீரவில்லை, உரிமை போராட்டம் தொடர்கிறது!

Slide1அண்மையில், கட்கோ நிலப் பிரச்சனை ஒரு தீர்வை நாடியது என்று நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் அறிவித்திருந்தார். ஆனால், வாக்குறுதி அளித்ததுபோல் தங்களுக்கு 8 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை எனக் கட்கோ குடியேறிகள் கூறியுள்ளனர்.

பலமுறை நீதிமன்றம் சென்ற இவ்வழக்கை, மத்திய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மாநில அரசு வழங்கிய தீர்வில் திருப்தியடையாத குடியேறிகளில் சிலர், நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதுபோல் நடந்துகொள்வதாக மந்திரி பெசார் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், கட்கோ நிலக் குடியேறிகளுக்கும் நில உரிமையாளர் தாமரை ஹோல்டிங்சுக்கும் இடையிலான நில உரிமை போராட்டம், கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வருவதாக மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறினார்.

“குடியேறிகளில் ஒரு சிலர் மட்டும் பிரச்சனை கொடுத்து வருவதாக மந்திரி பெசார் கூறியுள்ளார். ஆனால்,

செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் - ஆகஸ்ட் 4
செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் – ஆகஸ்ட் 4

468 குடியேறிகளில் 170 பேருக்கு  மட்டுமே மாநில அரசாங்கம் நிலம் வழங்கியுள்ளது,” என கெட்கோ மக்களின் பிரதிநிதியுமான அருட்செல்வன் நேற்று மாலை, சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தாமரை நிறுவனத்திடம் விற்கப்பட்டபோது, அந்நிலத்தின் குடியேறிகளுக்கு 8 ஏக்கர் நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அருட்செல்வன் கூறினார். அதற்கான ஆதாரமும் தம்மிடம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், கடந்த 2015-ல், 170 குடியேறிகளுக்கு மட்டுமே மாநில அரசு 4 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தது. ஆக, வேறு வழியில்லாததால், அந்நிலத்தின் விற்பனை செல்லுபடியாகாது என அறிவிக்கக்கோரி, குடியேறிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

கட்கோ வரலாறு

1977 – சுமார் 468 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், 4700 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரீடு செய்வதற்காக கெட்கோ (Great Alonioners Trading Corp.Bhd.) நிர்வாகத்தின்  கீழ் ஒன்றிணைந்தனர். ஒவ்வொருவரும் இந்தத் திட்டத்தில் சேர RM7600 செலுத்தினர்.

1979 – சீனி தொழிற்சாலை திவாலாகிப்போக, கரும்பு பயிரீடு நிறுத்தப்பட்டது. இதனால், கெட்கோ குடியேறிகள் தங்கள் வருமானத்தை இழந்தனர். எனவே, கெட்கோ நிறுவனத்தினர் வங்கியிலிருந்து RM15 லட்சம் கடன் பெற்று; ரப்பர் மரங்களைப் பயிரீடு செய்தனர்.

1983 – கெட்கோ குடியேறிகளுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்வழி, அவர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் 8 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. 2 ஏக்கர் நிலம் திருப்பி கொடுக்கப்பட்டதால், இரப்பர் பயிரீடு செய்ய முடிந்தது.

2003 – முறையான பண நிர்வகிப்பு இல்லாதலால் கெட்கோ நிறுவனம் திவால் ஆனது. பெறுநர் நிறுவனம் (receivership) கெட்கோ நிறுவனத்தைக் கையகப்படுத்தி; RM16 லட்சத்திற்கு ஏலம் விட்டது.

2004 – கெட்கோ குடியேறிகள், தாங்களே அந்நிலத்தை வாங்கிக் கொள்ள முடிவு செய்து 2% முன்பணம் செலுத்தினர். ஆனால், இவர்களுக்குத் தெரியாமலேயே நிலம் தாமரை நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. நிலத்தை வாங்குவதில் கெட்கோ குடியேறிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உடன்படிக்கையில் இருந்தாலும், அது கடைபிடிக்கப்படவில்லை.

Slide42012 – கெட்கோ மக்கள் நில மோசடியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பிப்ரவரி 2014, அந்த நில விற்பனையில் மோசடி நடந்துள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தாமரை நிறுவனம் நீதிமன்ற முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்தது.

2016 – வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 4 ஏக்கர் நிலத்தைப் பெற்றுக்கொள்ள நீதிபதி செய்த பரிந்துரையைக் குடியேறிகள் மறுத்துவிட்டனர். 17 அக்டோபரில் உயர்நீதிமன்றம் தாமரைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

2017 – குடியேறிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது நடப்பது என்ன?

கடந்த ஜூலை 18-ல், கட்கோ நிலத்திலிருந்து, சட்டத்திற்குப் புறம்பாக ரப்பர் மரங்களை வெட்டி வெளியேற்றிய லாரிகளைத் தடுத்தி நிறுத்தியதற்காக, 28 குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான 3 நாள் தடுப்புக்காவலை சிரம்பான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், எதிர்வரும் ஆகஸ்ட் 11-ல், அவர்கள் அனைவரும் பஹாவ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். செக்‌ஷன் 67 குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவர்.

ஜூலை 24-ல், அதே காரணத்திற்காக மீண்டும் 30 குடியேறிகள் கைது செய்யப்பட்டு, அதே நாளில் விடுதலையும் செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் பலர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள், அவர்களில் பெண்களும் அடங்குவர். இவர்களின்Slide3 கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, நாட்டின் பல பகுதிகளில் அமைதி மறியல் நடந்தது.

ஜூலை 27-ல், புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் தாமரை நிறுவனத்திற்குக் கைக்கூலிகள் போல் பணியாற்றும் காவல்துறையைக் கண்டித்து மகஜர் ஒன்றை குடியேறிகள் கையளித்தனர்.

கட்கோ நிலப்பிரச்சனையில் அம்மக்களுக்கு ஆதரவாகவும், தாமரை நிறுவனத்திற்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையம் உட்பட, பல அரசுசாரா இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை, புத்ராஜெயா நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 14-ம் தேதி செவிமடுக்கும்.