அன்வார்: ரவுஸ் தலைமை நீதிபதியாக பதவி அமர்த்தப்பட்டது ஒரு “கருப்புத் தருணம்”

anwarசிறையில்   உள்ள    பிகேஆர்    ஆலோசகர்    அன்வார்    இப்ராகிம்,   நேற்றிரவு  முகம்மட்  ரவுஸ்    ஷரிப்   தலைமை   நீதிபதி(சிஜே)யாக   பதவி   உறுதிமொழி   எடுத்துக்கொண்ட   நிகழ்வு   மலேசிய    நீதி  மற்றும்   அரசமைப்பு   வரலாற்றில்   ஒரு  “கருப்புத்  தருணமாகும்”  எனக்  குறிப்பிட்டிருக்கிறார்.

“அந்நியமனங்கள்  (முகம்மட்  ரவுஸ்   சிஜே,   சுல்கிப்ளி   மகினுடின்    முறையீட்டு   நீதிமன்ற   நீதிபதி)  பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்  அரசமைப்பு  முறைமைகளையும்   சட்ட   ஆளுமையையும்   தொடர்ந்து    உதாசீனப்படுத்தி    வருவதைக்  காண்பிக்கின்றன”,  என  அன்வார்  இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

நஜிப்பின்  இச்செயல்கள்  நஜிப்  மற்றும்  பிஎன்னால்   நாட்டின்   நற்பெயருக்கும்   மக்களின்   நல்வாழ்வுக்கும்   அபாயம்   ஏற்படும்   என்பதற்குக்  கட்டியம்  கூறுகின்றன   என்றாரவர்.