பார்டி சோசியலிஸ் மலேசியாவின் வேட்பாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் அப்துல் ரசாக் இஸ்மாயில், சிலாங்கூர் ஸ்ரீமூடா சட்டமன்றத் தொகுதியில் களமிறங்க ஆர்வம் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீமூடா பல்முனைப் போட்டிக்குரிய தொகுதியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்துல் ரசாக் பல்முனை போட்டியைக் கண்டு கலங்கவில்லை. அங்கு முன்னாள் பக்கத்தான் ஹராபான் சகாக்களை எதிர்க்க வேண்டி வந்தாலும் அதற்கும் அவர் ஆயத்தமாகவே உள்ளார் .
அவரது வெற்றிவாய்ய்பு குறித்து வினவியதற்குச் “சிறந்தவர் வெற்றி பெறட்டும்” என்றார்.
இப்போது பிகேஆரின் சுஹாய்மி ஷாபி அத்தொகுதியை வைத்துள்ளார். சுஹாய்மி சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர்.
வரும் 14-வது பொதுத் தேர்தலில் பார்டி சோசியலிஸ் மலேசியாவின் சிந்தாந்தம் அல்லது நோக்கம் என்ன? தனது வேட்பாளர்கள் வெல்ல வேண்டும் என்பதா? அல்லது எதிரணி வெல்லக்கூடாது என்பதா? எதிரணியான பக்காத்தான் வெல்லக்கூடாது என்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் உங்கள் நிலைப்பாடு சரியே. ஆனால் நடுவில் ஆளும் கட்சி வெல்லக்கூடாது என்பது உங்கள் நோக்கம் என்றால் பக்காத்தான் கூட்டணி நிற்கும் இடங்களில் போட்டியிட வேண்டாம். நீங்கள் ஒரு கட்சியாக தனித்து வெற்றி பெற காலம் இன்னும் கனியவில்லை என்றே தோன்றுகிறது
சபாஸ், அபதுல் ராசாக் ஒரு நல்ல வேட்பாளர், பல போராட்டங்களில் கலந்துக்கொண்ட நேர்மையாக பேசியவர். அதனால் சில ஊழல் பேர்வளிகளுக்கு பக்காத்தானில் பிடிக்கவில்லை., முக்கியமாக மகாதீர் அவர் பதவிக் காலத்தில் போட்ட ஆட்டத்திற்கு, அவர் மனவருத்தம் தெரிவித்திருந்தாலும், அவரை எதிர்த்து பக்காத்தானில் இருந்து விலகிய அப்துல் ராசாகிற்கும், ஹரப்பான் கூட்டணிமீது அவநம்பிக்கையுடன் தனி வழி அமைத்திருக்கும் பி எஸ் எம்முக்கு வாழ்த்துகள்.