கம்போங் கட்கோ பிரச்னையில் குடியிருப்பாளர்கள் முன்வைத்துள்ள பல கோரிக்கைகளுக்குத் தாமரை ஹோல்டிங்ஸ் பதலளித்துள்ளது.
நேற்று மலேசியாகினியுடனான நேர்காணலில், தாமரை ஹோல்டிங்ஸ் சர்ச்சைக்குரிய நிலம் தன்னுடையது என்று அழுத்தமாக வலியுறுத்தியது.
“நிலத்தின் சொந்தக்காரரே திருடுகிறார் என்றால் எப்படி?”, என லோட்டஸ் குழும தலைமை நடவடிக்கை அதிகாரி இராமலிங்கம் வினவினார். லோட்டஸ் குழுமத்தின் ஒரு பகுதிதான் தாமரை ஹோடிங்ஸ்.
நேற்று, கட்கோ குடியிருப்பாளர்கள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், கட்கோ நடவடிக்கைக் குழுச் செயலாளர் ஜான் கண்டியஸ், பிகேஎன்என்எஸ்(நெகிரி செம்பிலான் மாநில மேம்பாட்டு நிறுவனம்)-ஸும் தாமரை ஹோல்டிங்ஸும் “கூட்டுக் களவானிகள்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
பிகேஎன்என்எஸ் நிலக் குத்தகையை மேலும் 99 ஆண்டுகளுக்கு நீட்டிக்கொடுத்தது என்றும் அதற்குக் கைமாறாக தாமரை 1,200 ஏக்கர் நிலத்தை பிகேஎன்என்எஸ்-ஸுக்கு வழங்கியது என்றும் அவர் கூறினார்.
அதை மறுத்த ராமா, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குத்தகைக் காலம் நீட்டிக்கப்படவில்லை என்றார்.
“அந்த நிலம் அவர்களுக்கு (குடியிருப்பாளர்களுக்கு) இனாமாகக் கொடுக்கப்பட்டது. அது பணம் சம்பந்தப்பட்ட ஒரு வர்த்தக உடன்பாடு அல்ல.
“40-ஆண்டுக்காலப் பிரச்னைக்குத் தீர்வாக நல்லெண்ணத்துடன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது”, என்றார்.
மேலும், 2004, டிசம்பர் 2-இல் செய்துகொள்ளப்பட்ட விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தின் உட்பிரிவு 8, “குடியிருப்பாளர்கள் அந்த நிலத்தில் உரிமை கொண்டாட முடியாது” என்று கூறுவதாகவும் அவர் சொன்னார்.
தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது என்பதை அவர்கள் விளக்க வேண்டும். மேலும் இந்த சொத்துக்களுக்கு முறையான ஆவணங்கள் உண்டா? அவற்றுக்கு முறையாக சொத்து வரிகளும், வருமான வரியும் கட்டப்படுகின்றதா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் கூற வேண்டும்.
தாமரை ஹோல்ட்டிங்ஸ் எந்த வகையில் அந்த நிலங்களை வாங்கியது ? இதை யாராவது விசாரித்து உண்மையை வெளி கொணர வேண்டும். அதிக தில்லு முள்ளுகள் நடக்கிறது. நீதி செத்து விட்டதே இந்த நாட்டில்.
நான்கு பேர் செத்து ஒருத்தர் நல்லா இருந்தால் தப்பில்லை என்று நினைத்து இருப்பார்கள் தாமரை ஹோல்டிங்.