புதிதாக-மறுபடியும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முகமட் ரவுஸ் ஷாரிப் தமது மறுநியமனம் “முன்னோடி இல்லாதது”, ஆனால் அது அரசமைப்புச் சட்டப்பூர்வமானது என்று கூறிக்கொண்டார்.
“ஆம். எங்களைப் பொறுத்தவரையில் (எங்கள் நியமனங்கள் அரசமைப்புச் சட்டப்பூர்வமானது) … ஆனால் நிச்சயமாக, இது முன்னோடி இல்லாதது”, என்று அவர் புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எல்லாவற்றுக்கும் முதல் தடவை என்று உண்டு. முதல் தடவையாக ஒன்று நடந்தால், அங்கே பல வேறுபட்ட கருத்துகள் இருந்தேயாகும்.
வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், இறுதியில் இந்த நியமனங்களின் அரசமைப்புச் சட்டப்பூர்வமான தன்மை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நீதிமன்றத்தைச் சார்ந்ததாகும் என்றாரவர்.
வழக்குரைஞர்கள் எப்போதுமே ஒத்துப்போவதில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு விளக்கம் அளிப்பதில் வழக்குரைஞர்கள் ஒத்துப்போகாமல் இருப்பது ஒன்றும் புதுமையானதல்ல. இது நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கிறது என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.
ஆமாம் டா அடிவருடி. உன்னைப்போல் நாதாரிகள் மலிந்த நீதி துறையாகிவிட்டது இப்போது. நீ உண்மையிலேயே அவ்வளவு திறமைசாலியா? உன் பதவி உன் தோலுக்கும் நக்குவதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை. வெங்காயம்.
பின்னாடிக்கு நீங்கள் முன்னோடி! அது மட்டும் அல்ல. இரவோடு இரவாக – அதற்கும் நீங்கள் தான் முன்னோடி!