அடுத்து வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில், மலாக்கா சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பாரிசான் நேசனல் வேட்பாளர்களும் புதுமுகங்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த பொதுத் தேர்தலில் தங்களுடைய இருக்கைகளைத் தற்காத்துக் கொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறார். இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலாக்கா பிஎன் தலைவரும் முதலமைச்சருமான இட்ரீஸ் ஹருன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிஎன்னை பிரதிநிதிப்பதற்கு தொகுதிகள் ஐந்து அல்லது ஆறு, சில தொகுதிகள் எட்டு, பெயர்களைப் பட்டியலிடும். ஆனால், பிஎன் வேட்பாளர்கள் பற்றிய இறுதி முடிவு கட்சியின் உச்ச தலைமைத்துவம் முடிவு செய்யும் என்று செய்தியாளர்களிடம் இட்ரீஸ் கூறியதாக சினார் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் பாரிசான் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த இட்ரீஸ், எதிர்க்கட்சிகளின் வசமிருக்கும் பல இருக்கைகளை பாரிசான் கைப்பற்றக்கூடும் என்றும் கூறிக்கொண்டார்.
கொள்ளை அடித்தது போதும் என்று நினைத்து இருப்பார்கள் — அத்துடன் புதியவர்கள் – அவன்களின் கொள்ளையில் சதவீதம் கொடுக்கலாம்.எல்லாம் அதே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.
மக்கள் எத்தனை வருடத்திற்கு பழைய திருடர்களையே பார்த்து கொண்டிருப்பது ? மக்களுடைய சலிப்பை போக்க, அடுத்து வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் புது திருடர்களை கொண்டு வருவதும் அருமையான திட்டம்தான்.