சிலாங்கூர் மாநில ஆட்சியின் அதிகார மையம் ஷா அலாம். அதனால்தான் ஷா அலாம் அம்னோ தொகுதியின் பேராளர் கூட்டத்தை இன்று அவர் தொடங்கி வைக்க முடிவு எடுத்தது ஓர் அரசியல் செய்தி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது என்று நஜிப் கூறுகிறார்.
“ஷா அலாம் சிலாங்கூர் நிருவாகத்தின் மையம். நாம் சிலாங்கூரின் நிலத் தோற்றத்தை மாற்ற விரும்பினால், நாம் பிஎன் சிலாங்கூருக்கு திரும்பி வந்து தலைமை ஏற்க வேண்டுமானால், அந்த மாற்றம் இங்கே, இந்த ஷா அலாம் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்க வேண்டும்.
“ஷா அலாமை வெல்வது என்றால் நாம் சிலாங்கூரில் வெற்றி பெற்றோம் என்றாகும், அதை ஒப்புக்கொள்கிறீர்களா?, என்று நஜிப் கேட்க, பேராளர்கள் “ஆம்” என்று பெரும் ஆரவாரத்துடன் கூறினர்.
ஆனால், சிலாங்கூரை கைப்பற்றுவதற்கு நாம் இம்மாநிலத்தில் எதிர்க்கட்சியினாராக இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாரவர்.
2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களில் தோல்வியுற்ற பின்னர், பிஎன் சிலாங்கூரை பிடிக்க மூன்றாரவது முறையாக தோல்வியடையக்கூடாது என்றார் நஜிப்.
ஸுல்கிபிலி என்ற இன – மத வெறியனை அல்லது இவனை போல் வேறு ஒருவனை மீண்டும் களத்தில் இறக்கினால் ஷ் அலாமில் BN தோல்வி அடைவதை யாராலும் தடுக்க முடியாது ???
PAS காரர்களுக்கு ‘கொடுக்க வேண்டியதை’ கொடுத்தால், அவர்கள் வசம் உள்ள 12 சீட் களும் உங்கள் வசம் வந்துவிடும். பிறகென்ன, கூட்டல் கழித்தல் கணக்கு போட்டு மக்களை குழப்ப பார்க்கிறீர், அல்தான்துயா நஜிப்.
எல்லாவற்றையும் கைப்பற்றி கொள்ளை அடிக்கவே– இவ்வளவும்.
முன்னாள் பிரதமர் இந்நாள் பிரதமரை “PEROMPAK BUGIS” என வருணிக்கிறார்.
ஒருவேளை அதை நிரூபிக்கத்தானோ நஜிப் PB, சிலாங்கூரில் ஆட்சியைக் கைப்பற்ற ஷா அலாம்தான் சாவி என்கிறாரோ ?
கொள்ளை அடிக்கனும்னு வந்தாச்சு,
எவன் என்ன சொன்னா என்ன ?
தனது குல தொழிலை செம்மையாக நிறைவேற்றுவதில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும் நஜிப் PB-யை பாராட்டுவதில் தப்பில்லை.