மலேசிய தலைமை நீதிபதி ரவுஸ் ஷரீப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மகினுடின் ஆகியோரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது அரசமைப்புச் சட்டத்திர்கு முரணானது என்ற அதன் நிலைப்பாட்டில் மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) உறுதியாக இருக்கிறது.
பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் நீதிபதிகளின் நியமனம் குறித்த தெளிவின்மை ஏதும் இல்லை மற்றும் தமைலை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக செய்யப்பட்ட நியமனங்கள் மற்றும் அவர்கள் அதன் பின்னர் தலைமை நீதிபதியாகவும் மேல்முறையீட்டு தலைவராகவும் பதவியில் தொடர்வது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது மற்றும் சட்டப்படி செல்லாது என்ற அதன் நிலைப்பாட்டை மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் நிலைநிறுத்திகிறது என்று அதன் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் மலேசியகினியிடம் கூறினார்.
தாம் தலைமை நீதிபதியாக மறுபடியும் நியமிக்கப்பட்டது முன்னோடி அற்றது, ஆனாலும் அரசமைப்புச் சட்டப்பூர்வமானது என்று தலைமை நீதிபதி ராவுஸ் கடந்த சனிக்கிழமை கூறியிருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஜோர்ஜ், இவ்வாறு கூறினார்.
தலைமை நீதிபதி அவரது நியமனம் சட்டப்பூர்வமானது என்ற கருத்தைக் கூறுவதற்கான உரிமை அவருக்கு உண்டு என்று கூறிய ஜோர்ஜ், அது எப்படி சட்டப்பூர்வமானது என்று அவர் கூறவில்லை, ஏனென்றால் கட்டாய பதவி ஓய்விற்குப் பின்னர் அவர் அப்பதவியில் தொடரலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் வகைசெய்யப்படவில்லை என்பதை ஜோர்ஜ் தெளிவுப்படுத்தினார்.
தலைமை நீதிபதியின் மறுநியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் அதன் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றிருந்த தீர்மானத்தை அவர் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான விளக்கம் அவர் அளிக்கவில்லை என்பதையும் ஜோர்ஜ் சுட்டிக் காட்டினார்.
மலேசிய தலைமை நீதிபதி மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக மறுநியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று பார் அறிவித்துள்ளது.
என்னப்பா இது! ஒருவர் முன்னோடி என்கிறார்! இன்னொருவர் முரணானது என்கிறார்! எப்படியோ, பின்னாடி வரப்போகும் ஆபத்துகளுக்கு இது முன்னோடி என்பது புரிகிறது/
நீதி துறையின் லட்சணம் தெரிந்ததுதானே. எல்லாம் நம்பிக்கை நாயகன் அல்தான்துயாவின் கையில். அதிலும் அம்னோ மலாய் இனவெறி சோம்பேறிகளுக்கு அள்ளி கொடுத்து தன்னுடைய ஆட்சியை நீட்டிக்க எல்லாமே நடக்கும்.பெரும்பாலான மலாய்க்காரன்களுக்கு எந்த அரைவேக்காடு நாதாரி அவன் தோலில் இருந்தால் போதும்.