முக்ரிஸ்: அம்னோமீது கொண்ட அன்பு சட்டமன்றக் கலைப்பைத் தடுத்தது

mukrizமுக்ரிஸ்  மகாதிர்   அம்னோ   மற்றும்  பிஎன்மீது  அளவற்ற   பாசமும்  நேசமும்   கொண்டிருந்தார்.  அதுதான்    அவர்   கெடா  சட்டமன்றத்தைக்  கலைக்காமல்   மந்திரி  புசார்   பதவியிலிருந்து   விலகியதற்குக்  காரணமாகும்.

அன்று  மட்டும்      சட்டமன்றத்தைக்   கலைத்திருந்தால்    அதனை   அடுத்து    நடைபெற்றிருக்கும்     தேர்தலில்   பிஎன்   கெடா   மாநிலத்தைப்   பறிகொடுத்திருக்கும்   என்றே   முக்ரிஸ்   கருதுகிறார்.

“நான்  எம்பி  பதவியிலிருந்து   விலகியபோது   இன்னொன்றையும்   செய்திருக்கலாம்   என்பதை   மக்கள்   நினைத்துப்   பார்ப்பதில்லை. சட்டமன்றத்தைக்  கலைத்திருக்கலாம்.

“நான்  பதவி  விலக  வேண்டும்   என்பதைக்கூட    யாரும்  நேரடியாக   என்னிடம்   சொன்னதில்லை. ஆனால்,  சட்டமன்றத்தில்    ஆதரவு   குறைந்துவிட்டது   என்பதும்   அதனால்   நான்  பதவிவிலக   வேண்டும்   என்பதும்    மறைமுகமாக   உணர்த்தப்பட்டது.

“அதனால்   நானும்  ஒரு  மேலான   முடிவைச்   செய்தேன்.  ஆனால்,  நான்   செய்திருக்கக்  கூடிய   மற்றொரு  காரியம்   குறித்து    அதாவது   சட்டமன்றக்  கலைப்புக்  குறித்து    யாரும்   பேசுவதில்லை.  அப்படிச்   செய்திருந்தால்   மாநிலத்   தேர்தல்    நடந்திருக்கும்.  அன்றிருந்த   நிலையில்   பிஎன்   தோற்றுப்  போயிருக்கும்”,  என  மலேசியன்  இன்சைட்டுக்கு   வழங்கிய   நேர்காணலில்   முக்ரிஸ்   கூறினார்.