சட்டவிரோத பாக்சைட் எடுக்கும் நடவடிக்கை: 11வது ஆள் கைது

arrestமலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி),   சட்டவிரோதமாக    பாக்சைட்     எடுப்போருக்குத்    தகவல்   அளித்தார்    என்று   குற்றஞ்சாட்டி  பகாங்   நில,  சுரங்க   அலுவலகத்தின்   பணியாளர்   ஒருவரை  இன்று   தடுத்து  வைத்தது.

எம்ஏசிசி  அதன்    அலுவலகத்தில்  வைத்து   அந்த   33-வயது    ஆடவரைக்  கைது   செய்தது.

“சட்டவிரோத   பாக்சைட்     எடுப்போருக்கு   புக்கிட்   கோ-வில்     நடைபெறும்    நடவடிக்கை    குறித்து   தகவல்    சொல்ல    அவர்  இவ்வாண்டு   மார்சுக்கும்  ஜூலைக்குமிடையில்    ரிம250-இலிருந்து   ரிம500வரை     கையூட்டு   பெற்றிருப்பதாகத்   தெரிகிறது”,  என   அதன்  அறிக்கை    தெரிவித்தது.

அவருடன்   சேர்த்து   சட்டவிரோத   பாக்சைட்   எடுக்கும்   நடவடிக்கை    தொடர்பில்   எம்ஏசிசி   இதுவரை    விசாரணைக்காக   தடுத்து  வைத்துள்ளவர்    எண்ணிக்கை  11  ஆகிறது.  அவர்களில்   சுங்கத்துறை   உயர்   அதிகாரியும்   ஒருவர்.