தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கின் வேண்டுகோளை ஏற்று “The Malay Regiment.” படத்திலிருந்து டிஏபி-யை இழிவுபடுத்துவதாகக் கூறப்படும் காட்சி அகற்றப்படும்.
அப்படத்தின் இயக்குனர் ஜுரே லத்திப் ரோஸ்லி இதைத் தெரிவித்தார்.
“அமைச்சரின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
படத்தில் ஒரு காட்சியில் “டிஏபி165” என்ற எண்பட்டைக் கொண்ட ஒரு கார் காண்பிக்கப்படுகிறது என்றும் அது பொருத்தமற்றது என்றும் சாலே கூறியிருந்தார்.
யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தின் முன்னோட்டத்தில் அக்காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, படத்தின் மூலமாக டிஏபி-எதிர்ப்பைச் சித்திரிக்க முயல்வதாகக் கூறப்படுவதை ஜுரே மறுத்தார்.
“நான் அப்படி நினைக்கவில்லை. கம்முனிசம் இனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நாங்கள் சொல்லவில்லை. மற்ற இனத்தாரும் கம்முனிஸ்டுகளாக இருந்துள்ளனர்”, என்றாரவர்.
DAP என்றாலே கம்யூனிசம் என்கிற நினைப்பு உங்களுக்கு வருவதை போல, BN என்றாலே இப்போதெல்லாம் எங்களுக்கு இந்தோனேசியர்களின் கட்சி என்கிற நினைவுதான் எங்களுக்கு வருகிறது .