ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுப்பதற்காக சட்டத் திருத்தம் (திருமண மற்றும் மண விலக்கு) சட்டம் 1976 க்கு கொண்டுவரப்பட்ட திருத்தம் கைவிடப்பட்டத்திற்கு பாஸ் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது கைவிடப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம், ஏனென்றால் இதில் சம்பந்தப்பட்டுள்ள கொள்கைகள் தேசிய பாட்வா மன்றத்திற்கு முரண்பட்டதாக இருக்கின்றன என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் எந்த ஒரு சட்டமும் சமயச் சட்டங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சர்ச்சைகள் இருக்காது. ஆகவே, இது கைவிடப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் அம்பாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நம்பிக்கை நாயகன் மீது நம்மவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த ஒரு செருப்படி இந்த சட்டத்திருத்த மசோதா கைவிடுப்பு.. கூஜாத்தூக்கிகள் என்ன சொல்லப் போகிறார்கள்ழ