2014க்கும் 2016க்குமிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மொத்தம் 181 தடவை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.
பிரதமருக்கு அடுத்து பேரரசசர் 89 தடவை அந்த அரசாங்க விமானத்தைப் பயன்படுத்தினார். துணைப் பிரதமர் 10 தடவை.
%d bloggers like this:
நான் முன்பு ஒருமுறை கூறி இருந்தேன்– நமது விமானப்படை நாட்டை தற்காக்க கிடையாது— விமானப்படை நாதாரிகளின் taxi service ..
2.5 பில்லியன் நன்கொடையை நாட்டிற்குள் கொண்டுவர 181 தடவை அரசாங்க ஜெட் விமானத்தில் பறந்துள்ளார் நஜிப் PB.
2.5 பில்லியனுக்காக 181 ஜெட் விமான பயணம் அதிக சிக்கனமாகத்தான் பயணம் செய்திருக்கிறார் நஜிப் PB.
இறுதியில் சிக்கன விமான பயண நிறுவனமான ஏர்-ஆசியா நஜிப் PB -யிடம் தோல்வி அடைந்து விட்டது.
நம் நாட்டு பாராளுமன்ற கேள்வி பதில்கள், கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிக்கப்பட வேண்டியவை. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கையில் ஒன்றுக்கும் உதவாத கேள்விகளுக்குத்தானா பதில்கள். நம் நாட்டு அலிபாபாக்கள் நிறைந்துள்ள 1MDB சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் வராதாம், ஏன்?
1 MALAYSIA DALAM BAHAYA என்பதை சுருக்கி 1MDB என்று நாசுக்காக பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை கூறுவதிலிருந்து மக்கள் இந்நேரம் மலேசிய அமைச்சரவை கொள்ளையர்களின் கூடாரமாகி விட்டது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
இல்லையேல் கொள்ளையர்கள் நினைப்பதுபோல் மலேசிய மக்கள் அல்ல “””மலேசிய மாக்கள்””” என்று தங்களது கொள்ளை அடிக்கும் கொள்கையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.