மதமாற்றத் தடை நீங்கலாக, எல்ஆர்ஏ சட்டத்துக்குத் திருத்தம் கொண்டு வருவதில் அவசரம் காட்டும் அரசாங்கம்

dewanபுத்ரா  ஜெயா,  இவ்வாரத்திலேயே  சட்டத்  திருத்த (திருமணம்,  மணவிலக்கு)ச்  சட்டத்துக்குத்   திருத்தம்   கொண்டு  வருவதில்   முனைப்புக்  காட்டுகிறது. கொண்டுவரப்படவுள்ள    திருத்தத்தில்   குழந்தைகளை  ஒருதலைப்பட்சமாக   மதமாற்றம்   செய்வதற்குத்   தடைவிதிக்கும்   பகுதி   இருக்காது.

திருத்தப்பட்ட   சட்டமுன்வரைவை  இன்று  மக்களவையில்     தாக்கல்    செய்த    பிரதமர்துறை  அமைச்சர்    அஸலினா  ஒத்மான்   அதன்  இரண்டாவது,  மூன்றாவது   வாசிப்பும்   நடப்புக்   கூட்டத்தொடரிலேயே   நடைபெறும்  என்றார்.

நடப்பு   நாடாளுமன்றக்  கூட்டத்தொடர்   வியாழக்கிழமை  முடிவுக்கு   வரும்.

எல்ஆர்ஏ-க்கு   முதலில்   கொண்டுவரப்பட்ட   திருத்த  மசோதா,   அதிலிருந்து  பகுதி   88ஏ-யை   நீக்குவதற்காக   நேற்று  மீட்டுக்கொள்ளப்பட்டது.

பகுதி  88ஏ  கூறுவதாவது:  மணம்  புரிந்துகொண்ட   இருவரில்   ஒருவர்  இஸ்லாத்துக்கு   மாறினால்,  அவர்களுக்குப்  பிறந்த  குழந்தை    மதமாற்றத்துக்கு  முன்னர்   அவர்கள்   எந்த  மதத்தைச்  சார்ந்தவர்களாக   இருந்தார்களோ   அந்த  மதத்தைச்     சார்ந்ததாகத்தான்   இருக்கும். இருவரின்  விருப்பத்தின்பேரில்தான்    அதை  மதமாற்றம்    செய்ய  முடியும்.  பிள்ளைக்கு  18வயதென்றால்    அதன்  விருப்பத்துக்கும்   மதிப்பளிக்க    வேண்டும்.