ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்களா அரசாங்க அதிகாரிகள்: உடனடியாக புகார் செய்வீர்

azamஅரசாங்க     அதிகாரிகள்   வரவுக்கு  மீறிய   வாழ்க்கை   வாழ்வதைக்   காணும்   பொதுமக்கள்   அது   குறித்து  உடனடியாக     புகார்   செய்ய    வேண்டுமென்று  மலேசிய     ஊழல்    தடுப்பு      ஆணையம் (எம்ஏசிசி),   வலியுறுத்தியது.

“அவர்கள்   வருமானத்தை  மீறிய   ஆடம்பர    வாழ்க்கை    வாழ்வது   எப்படி   என்பதை  எம்ஏசிசி   முடிவு  செய்யும்.  அவர்களின்  சொத்துகள்   சட்டப்பூர்வமாக  பெறப்பட்டவைதானா   என்பதை   அது   கண்டறியும்”,  என  எம்ஏசிசி   துணைத்   தலைமை   ஆணையர் (நடவடிக்கை)  முகம்மட்  அசாம்  பக்கார்  கூறினார்.

அசாம்,  பெர்னாமா   தொலைக்காட்சியின்      ‘Ruang Bicara’   நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு   பேசினார்.

எம்ஏசிசி  சும்மா   இல்லை    என்றும்   அது   உயர்   அதிகாரிகளைக்  கண்காணிப்பதுடன்   அவர்களின்  சொத்துகள்   எப்படி   வந்தன  என்பதை  ஆராய்ந்து   கொண்டிருப்பதாகவும்   அசாம்   கூறினார்.