சரவாக்கில் புதிதாக ஒரு சிறுவனுக்கு ரேபிஸ் நோய்

dogசரவாக்கில்  ஏழு  வயது   சிறுவனுக்கு   வெறிநாய்க்கடி  நோய்  வந்திருக்கிறது.    சரவாக்கில்   வெறிநாய்க்கடி   நோய்க்கு   ஆளான   ஆறாவது   ஆள்   அச்சிறுவன். ஏற்கனவே   அந்நோயால்    பாதிக்கப்பட்ட   ஐவரும்   இறந்து   போனார்கள்.

அந்நோயால்  புதிதாக  பாதிக்கப்பட்ட     சிறுவன்   சமராஹானில்,  கம்போங்   கோலா   கெடோங்கைச்   சேர்ந்தவன்    எனச்  சுகாதார  தலைமை   இயக்குனர்   டாக்டர்   நூர்  ஹிஷாம்   அப்துல்லா    நேற்றிரவு   ஓர்    அறிக்கையில்     தெரிவித்தார்.  அவனை   ஜூலை  17-இல்  ஒரு   நாய்  கடித்திருக்கிறது.

அச்சிறுவனுக்கு   செரியான்  மருத்துவமனையில்    ஜூலை   21, 24,  28    ஆகிய   மூன்று    நாள்களும்   மூன்று   முறை  ரேபிஸ்-தடுப்பூசி   போடப்பட்டது   என்றாரவர்.  ஆனாலும்  காய்ச்சல் ,  இருமல்,  வாந்தி  முதலியவை   தொடர்ந்தன. அதனால்   அவன்   ஆகஸ்ட்   முதல்    நாள்   மருத்துவமனையில்   சேர்க்கப்பட்டான்.

அவன்  உடல்நிலையில்   எந்த  மேம்பாடும்  காணப்படவில்லை. மனப்பிரமைக்கும்   ஆளானதால்   அவன்  செரியான்  மருத்துவமனையிலிருந்து   சரவாக்   பொது   மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டான்.  இப்போது  அங்குதான்  உள்ளான்.  அவனது  உடல்நிலை   மிகவும்  கெட்டுப்  போயுள்ளது.