காணாமல் போய்விட்ட பாதிரியார் கோ, மற்றவர்கள் பற்றி சுஹாகாம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது

 

Suhakamtoprobeகாணாமல் போய்விட்ட பாதிரியார் ரேமெண்ட் கோ, சமூக ஆர்வலர் அம்ரி செ மாட், பாதிரியார் ஜோசுவா ஹில்மி மற்றும் அவரது துணைவியார் ரூத் ஹில்மி ஆகியோர் பற்றிய ஒரு பொது விசாரணையை மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுகாஹாம்) எதிர்வரும் அக்டோபரில் மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த விசாரணை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனரா அல்லது தாங்களாகவே காணாமல் போய்விட்டனரா என்பதைக் கண்டறிவதில் கவனம் செலுத்தும் என்று சுகாஹாம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.

2006 ஆம் ஆண்டில், ஐக்கியநாட்டு பொதுச்சபை கட்டாயமாகக் காணமலாக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒப்பந்தம் (International Convention for the protection of All Persons from Enforced Disappearance(ICPPED)ஒன்றை ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் மலேசியா அங்கம் பெறவில்லை.

இந்த விசாரணையில் அரசாங்க இலாகாகள், குறிப்பாக போலீஸ் படை, காணமல்போனவர்களைப் பற்றி அவை நிறைவான நடவடிக்கைகளை மேற்கொண்டனவா என்பதும் அடங்கும் என்று சுகாஹாம் தெரிவித்துள்ளது.

“இந்த விவகாரம் குறித்த உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களிடமிருந்தும் சுகாஹாம் தொடர்ந்து தகவல் சேகரிக்கும்”, என்று அது மேலும் கூறியது.

இது பொதுமக்கள் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு பிரச்சனை. ஆகவே, இந்த விசாரணை தேவைப்படுகிறது என்று சுகாஹாம் நம்புகிறது என்று அது மேலும் தெரிவித்தது.