ஒருதலைப்பட்சமான மதமாற்றத்தில் ஒரு குழந்தையை பெற்றோரில் ஒருவர் மட்டும் தன்னிச்சையாக மதம் மாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வகை செய்யும் ஒரு சட்டப் பகுதியை கைவிட்டதற்காக டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று நாடாளுமன்றத்தில் அவரது உணர்ச்சியூட்டும் உரையில் அரசாங்கத்தைச் சாடினார்.
நாடாளுமன்ற மக்களவையில் பொதுமக்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்திருந்த இந்திரா காந்தியின் மகள் 19 வயதான தேவி தர்ஷிணியைச் சுட்டிக் காட்டி (அவரது தந்தையால் அவர் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டவர்) அவையிலிருந்த அமைச்சர்களிடம் அப்பெண் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்று விளக்கிச் சொல்லுங்கள் என்று குலா கூறினார்.
“நீங்கள் அப்பெண்ணிடம் சொல்லுங்கள், அவர் முஸ்லிமா அல்லது இந்துவா? இதன் காரணமாக அவர் இரவில் அழுது புலம்புகிறார்.
“அப்பெண் உங்கள் மகளாக அல்லது சகோதரியாக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்”, என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான குலா அங்கு அமர்ந்திருந்த அமைச்சர்களைக் கேட்டார்.
அவையில் அமர்ந்திருந்த அமைச்சர்களில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் ஆகியோரும் அடங்குவர்.
தேவியும் அவரது இரு உடன்பிறப்புகளும் அவர்களுடைய தந்தையால் இரகசியமாக 2009 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டார்கள்.
அவர்களுடைய மற்றும் எஸ். தீபாவின் குழந்தைகளின் மத மாற்றம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன் பெற்றோர்களில் ஒருவர் மட்டும் தன்னிச்சையாக குழந்தைகளின் மதத்தை மாற்றுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டன.
இப்பிரச்சனைக்கு தீர்வாக அரசாங்கம் தாக்கல் செய்திருந்த சட்டத் திருத்தம் (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் (திருத்தம்) மசோதாவில் (எல்ஆர்எ) ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை தடை செய்ய வகை செய்யும் ஒரு சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால், மசோதாவில் செக்சன் 88A இன் கீழ் சேர்க்கப்பட்டிருந்த இந்தப் பிரிவை அகற்றி விட்டு அது இல்லாத எல்ஆர்எ ஐ அரசாங்கம் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
அன்றைய தினமே, செக்சன் 88Aயை மீண்டும் மசோதவில் சேர்க்கும் தீர்மானத்தை குலா முன்மொழிந்தார்.
ஆனால், இந்த முயற்சியை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இன்றிரவு நடந்த விவாதத்தின் போது சட்ட நுணுக்கத்தின் அடிப்படையில் நிராகரித்தார்.
அவரது முடிவை அவையின் துணைத் தலைவர் இஸ்மாயில் சைட் வாசித்தார்.
அப்பெண் முஸ்லிமா அல்லது இந்துவா? என கூற நாடாளுமன்றம்
தடுமாறுகிறதா ?
அப்பெண்ணுக்கு பன்றி இறைச்சி உணவை வழங்குங்கள்.
அப்பெண் பன்றி இறைச்சி உணவை சாப்பிட்டால் இந்து.
அப்பெண் பன்றி இறைச்சி உணவை சாப்பிட மறுத்தால் இஸ்லாம்.
தீர்ந்தது பிரச்னை இதற்கு போய் நாடாளுமன்ற நேரத்தை வீணடிச்சிக்கிட்டு இருக்கீங்க.
MIC யும் மற்ற BN கட்சிகளும் ஜால்ரா போடுகின்றனவா!
திரு.ரகீம் அவர்களே,யாரும் எதிர்ப்பார்க்காத முடிவை முன்மொழிந்தீர்கள். வாழ்க,