இந்திரா துன்பப்பட்டிருப்பார், அப்படித்தான் இஸ்லாத்திற்கு மாறியவர்களும் துன்பப்பட்டிருக்கிறார்கள், பாஸ் கூறுகிறது

 

indiryesசட்டம் திருத்தம் (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் முஸ்லிம் அல்லாத இந்திரா காந்தி போன்றவர்கள் மட்டும் துன்பப்படவில்லை, இஸ்லாத்திற்கு மாறியவர்களும் துன்பப்பட்டுள்ளனர் என்று பாஸ் இன்று கூறியது.

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இதர 13 பாஸ் எம்பிகளின் ஆதரவுடன், பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசானிடம் இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறிவிட்ட அவரது கணவருடன் கடந்த எட்டு வருடங்களாக அவருடைய குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் போராடி துன்பம் அனுபவித்து வருகிறார். அவரது துன்பத்திற்கு செக்சன் 88A திருத்தம் ஒரு தீர்வு அளித்திருக்குமே என்று கேட்டதற்கு. இஸ்லாத்திற்கு மாறிவர்களும்கூட துன்பம் அனுபவித்துள்ளனர் என்று அவர் பதில் அளித்தார்.

கடந்த 10 லிருந்து 20 ஆண்டுகள் வரையில் முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்களும்கூட துன்பப்பட்டுள்ளனர். இதெல்லாம் ஒரே மாதிரியானதுதான் என்று தக்கியுடின் ஹசான் கூறினார்.