சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், 1எம்டிபி மேற்கொண்டுள்ள “சீரமைப்பு” நடவடிக்கைகள் நல்லபடி நடந்து வருவதாக நம்புகிறார்.
திங்கள்கிழமை 1எம்டிபி சிஇஓ அருள்கண்ட கந்தசாமியின் விளக்கமளிப்பைக் கேட்ட பின்னர் அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார்.
“அந்த விளக்கமளிப்பில் அருள் 1எம்டிபியின் நடப்பு நிதி நிலவரம் குறித்து விவரித்தார், வரவுசெலவு அறிக்கையைக் காட்டினார்.
“அதன் முடிவில், இப்போதுள்ள சொத்துகளை வைத்து 1எம்டிபியால் அதன் கடன்களைச் செலுத்த முடியும் ஆதாயமும் காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது”, என காலிட். காலி பண்டார் துன் ரசாக் எம்பி-யும் ஆவார்.
அருள் பெற்றாலே தெளிவு பிறந்துவிடும்! கண்ட கண்ட சாமியில்லையே!