டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மூன்று மகன்களின் நிறுவனங்கள்மீதும் வருமான வரி வாரியம் (ஐஆர்பி) குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை, மிர்சான் மகாதிரின் கிரெசெண்ட் கெபிடல் சென். பெர்ஹாட்டில் ஐஆர்பி அதிரடிச் சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தினார்.
“எட்டிலிருந்து பத்து ஐஆர்பி அதிகாரிகள் வந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றனர்”, என்றாரவர். அவருடைய பெயரைத் தெரிவிக்க அவர் விரும்பவில்லை.
அதே நாளில் முக்ரிஸ் மகாதிர் தோற்றுவித்து அவரின் அண்ணன் மொக்சானி மகாதிரால் வழிநடத்தப்படும் ஒப்கோம் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிலும் ஐஆர்பி சோதனை நடந்ததை அதன் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் மேல்விவரங்கள் தெரிவிக்கவில்லை.
அதே செவ்வாய்க்கிழமை மொக்சானிக்குச் சொந்தமான கெஞ்சானா கெப்பிடல் சென். பெர்ஹாட்டிலும் ஐஆர்பி அதிரடிச் சோதனை நிகழ்ந்துள்ளதாக மகாதிருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
மே மாதமே மகாதிர் கூறியிருந்தார், தம்மைச் சார்ந்தவர்களை ஐஆர்பி குறி வைக்கிறது என்று.
அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, என்றாலும் மகாதிருக்கு நெருக்கமான இருவர், லீ கிம் இயு, முஸ்தபா கமால் அபு பக்கார்
ஆகியோரின் தொழில்கள் வருமான வரிச் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன.
பக்கத்தான் ஹராபானுக்கு நன்கொடை வழங்குவோருக்கும் அதிகாரிகள் நெருக்குதல் கொடுப்பதாக மகாதிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நாள் பிரதமரின் கொள்ளைக்கார கூடாரம்,
முன்னாள் பிரதமரின் கொள்ளைக்கார கூடாரத்தை தீண்டுவது,
இப்போதைய பிரதமர் தனது கொள்ளைக்கார கூடாரத்தை காப்பாற்றி கொள்ளத்தான் என்பதைகூட அறிய தெரியாத மடையர்கள்தான் மலேசியா மக்கள் என்று இந்நாள் பிரதமர் நினைத்ததிலும் தப்பு இல்லை.
100-க்கும் 500-க்கும் கையேந்தும் மலேசிய மக்கள் இருக்கும்வரை இந்நாள் பிரதமரின் கொள்ளைக்கார கூடாரத்தை அசைக்கவோ ஆட்டவோ முடியாது.
“அரசியல் போர்வை”க்குள் மக்களின் வரிப்பணத்தை உண்டுக்கொழுத்து பதுங்கியிருந்த “இரண்டு கால் நாய்கள்”, இப்போது தெருவிற்கு வந்து, மூர்க்கமாக ஒன்றையொன்று கடித்துக் குதறத் தொடங்கியிருக்கின்றன. இது முதல் பாகம்தான் ! பாகம் 2
இந்த நாட்டில் பூமிபுத்திரா அல்லாதவர் 25% குறைவானால் பூமிபுத்திராவினர்குள்ளேயே அரசியல் பொருளாதர மோதல் ஏற்படும் என்று எண்ணியிருந்தது தப்பாகி விட்டது!
நாம் எதை விதைக்கின்றோமே, விதைத்ததுதான் முளையும்; இதுதான் உண்மை. இனிமேல் இந்தஉண்மை இனி எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாவிடங்களிலும் நல்லப் பாடமாக அமையட்டும்.
மகாதீர், நீ செய்தது உனக்கே திரும்பி வருகின்றது. இதுதான் கர்ம வினை.
dawamani ! சரியாக சொன்னீர்கள்!! இவன் நமது சமுதாயத்துக்கு செய்த துரோகமெல்லாம் இப்போது இவன் குடும்பத்துக்கே திரும்புகிறது. குழி வெட்டுபவன் அந்தக்குழியிலேயே விழுவான்.
அரசியல்வாதி பெற்ற பிள்ளைகள் அவர்கள். அதனால் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பார்கள்!